சென்னை,பிப்.1- சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டிடம் மற்றும் அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதி கட்டிடம் ஆகியவற்றிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியா ழன் அன்று அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.197.14 கோடி மதிப்பில் நவீன கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-அரசு மருத்துவ மனைகளில் காலியாக உள்ள மருத்து வர்கள் பணியிடங்களை நிரப்ப மருத் துவ தேர்வு வாரியம் மூலம் மருத்து வர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக 1021 மருத்துவர்கள் 20 மாவட்டங்களில் நியமிக்கப்படு கிறார்கள். மருத்துவர்கள் காலி பணி யிடங்களை நிரப்புவதற்கான கலந் தாய்வு 3 ஆம் தேதி நடைபெறுகிறது. 4 ஆம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.