tamilnadu

img

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை

உதகை, ஜூலை 16- சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலு வலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம், மலை பிரதேசமாக இருப்பதால் இங்கு  உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டம் மற்றும் வெளி  மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில், அதிக மாக வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அறுவடை  செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அறுவடை பணி  முடிந்த பின், சரக்கு வாகனங்களில் மேல் அமர்ந்து செல்வது  வாடிக்கையாகி விட்டது. குறுகலான சாலையில் செல்லும்  வாகனங்களில் தொழிலாளர்கள் அமர்ந்து செல்வதால் விபத்து அபாயம் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள் ளது. இதனை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி  பவ்யா உத்தரவின் பேரில், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சக்தி குமார் தலைமையில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சக்தி குமார், தமிழ்நாடு மோட் டார் வாகன சட்டப்படி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங் கள் மீது தொழிலாளர்களை அமர வைத்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத் தாமல் வாகனங்களை இயக்கினால் உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ள சிறு வர்களுக்கு வாகனம் ஓட்ட பெற்றோர்கள் ஊக்குவித்தாலும் அல்லது பெற்றோருக்கு தெரியாமல் வாகனங்களை இயக் கினாலும் சிறை தண்டனை விதிக்கப்படும்.  பிற மாநிலங்க ளின் பதிவெண்கொண்ட வாகனங்கள் தமிழகத்தில் இயக்கி னால் மறுப்பதிவு செய்து இயக்க வேண்டும் அதை மீறி  இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ் வாறு அவர் பேசினார். இதில் ஏராளமான ஓட்டுநர்கள், உரிமை யாளர்கள் பங்கேற்றனர்.