வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆண்ட்ரே ரஸல் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள்(வெஸ்ட் இண்டீஸ்) கிரிஜ்ஜெட் அணியின் ஆல் ரவுண்டராக அறியப்பட்டவர் ஆண்ட்ரே ரஸல்(37). இவர் ஜமைக்காவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் உள்ளிட்ட தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.