games

img

விளையாட்டு

கிரிக்கெட்டில் வெறுப்பைத் தூண்டும் கில்

சமீபத்தில் நிறைவு பெற்ற, 10 ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூ ஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தி 3ஆவது முறையாக  சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சனுக்கு  தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியான சூழலில், இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான சப்மன் கில் இந்திய அணி உலகக்கோப்பையை கொண்டா டும் புகைப்படத்தைப் பகிர்ந்து சர்ச்சை யை கிளப்பியுள்ளார். கில் பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. வேண்டுமென்றே சாம்சனை அந்தப் படத்திலிருந்து நீக்கிவிட்டு பதிவிட்டது போன்று உள்ளது. இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரணம் சஞ்சு சாம்சன் கோப்பை கொ டுக்கும் நிகழ்வில் கடைசி வரை வீரர்க ளோடு மேடையில் தான் இருந்தார். அவர் எங்கேயும் செல்லவில்லை. அதே போல கேப்டன் சூர்யகுமார் போன்ற பிற வீரர்கள் பகிர்ந்த புகைப் படங்களில் சஞ்சு சாம்சன் உள்ளார். ஆனால் கில்லின் பதிவு மட்டுமே மாறுபட்டதாக உள்ளது. இதுதான் காரணமா? முன்பு நடைபெற்ற ஆசியக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக கில் தேர்வு செய்யப்பட்டார்.  இது விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. கில் டி-20 போட்டிகளில் தடுமாறிய போதும் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால், இருவருக்கும் இடையே ஒரு போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகின. ஆசியக் கோப்பையில் சொதப்ப, டி-20 உல கக்கோப்பையில் கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. இதன் காரணமாக தான் கில் சாம்சன் இல்லாத புகைப்படத்தைப் பகிர்ந்து இருக்கலாம் என ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் சமூக வலைத் தளங்களில் குற்றம்சாட்டி வரு கின்றனர்.