ஏகாதிபத்திய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக தில்லியில் தொழிலாளர்-விவசாயிகள் போர் முரசு!
புதுதில்லி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயி கள் முன்னணி (எஸ்கேஎம்) சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் மார்ச் 9 அன்று “தொழிலாளர்-விவ சாயிகள் நாடாளுமன்றம்” (Work ers-Farmers Parliament) நடை பெற்றது. இந்த நாடாளுமன்றம் மோடி அரசின் கார்ப்பரேட் சார்பு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியச் சரணாகதிக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட் டத்தை முன்னெடுக்க அறைகூவல் விடுத்துள்ளது. குறிப்பாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என எச்சரித்துள்ளது. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தமும் ‘சரண்டர் மோடி’ முழக்கமும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், தில்லி வீதிகளில் திரண்ட ஆயிரக் கணக்கான உழைக்கும் மக்கள், அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவ சாயத்தைச் சீரழிக்கும் என முழக்க மிட்டனர். “நரேந்திர மோடி என்றால் சரண்டர் மோடி” என்ற முழக்கங்கள் எதிரொலித்தன. மலிவான விலை யில் கிடைக்கும் ஈரான் மற்றும் ரஷ்ய எண்ணெய்யைப் புறக்கணித்து விட்டு, அமெரிக்காவின் விலையு யர்ந்த கச்சா எண்ணெய்யை இறக் குமதி செய்ய மோடி அரசு ஒப்புக் கொண்டது தேச நலனுக்கு எதிரா னது எனத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் உள்ளூர்ச் சந்தையில் மானியம் அளிக்கப்பட்ட அமெரிக்க விவ சாயப் பொருட்களைக் குவித்து, சிறு விவசாயிகளைப் பட்டினிக்குத் தள்ளும் எனச் சுட்டிக்காட்டப் பட்டது. மார்ச் 23: ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமாகப் பிரகடனம் இந்தத் தொழிலாளர்-விவசா யிகள் நாடாளுமன்றத்தில் மூன்று முக்கியப் போராட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன: l மார்ச் 23 : பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகளின் நினைவு தினத்தை, அமெரிக்கா வுடனான வர்த்தக ஒப்பந்தங்களு க்கு எதிரான “ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமாக” நாடு முழுவ தும் அனுசரிப்பது. l மார்ச் 24 : தில்லியில் லட்சக்கணக் க்கான மக்களைத் திரட்டி மாபெரும் “ஜன ஆக்ரோஷப் பேரணி” நடத்துவது. l ஏப்ரல் 1 : நான்கு தொழிலா ளர் சட்டக் குறியீடுகளை (Labour Codes) நடைமுறைப்படுத்துவ தற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா முழுவதும் “கருப்பு தினம்” கடைப்பிடிப்பது. மாநில உரிமைகளும் உழைப்பாளர் பாதுகாப்பும் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்து, மாநிலங்களுக்கான வரு வாய் பகிர்வை 33 சதவீதத்திலி ருந்து 60 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் இம்மாமன்றம் வலியுறுத்தியது. மேலும், வளை குடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தி யத் தொழிலாளர்களின் பாது காப்பை உறுதி செய்யவும், போரி னால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய ஏற்றுமதிக்குப் போதிய இழப்பீடு வழங்கவும் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஹன்னன் முல்லா, அசோக் தாவ்லே மற்றும் பல தொழிற் சங்கத் தலைவர்கள் உரையாற்றிய இக்கூட்டம், மக்களின் கோரிக்கை களை அரசு தொடர்ந்து புறக் கணித்தால், நாடு தழுவிய அளவில் ஒரு மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. (லெப்ட் வியூஸ்)
