உழைப்பின் உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் - மதவெறி அரசு
சென்னையில் நடைபெற்ற தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரிகள் சங்கத்தின் 39-ஆவது அகில இந்திய மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய சிஐடியு அகில இந்தியத் துணைத்தலைவர் அ.சவுந்தரராசன், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளையும், ‘புதிய இந்தியா’ என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் கார்ப்பரேட் நலன்களையும் கடுமையாகச் சாடினார். அவர் ஆற்றிய உரையின் பகுதிகள்:
அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரிகள் சங்கத்தின் 39-ஆவது மாநாடு ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் நடை பெறுகிறது. ஊழியர்களின் நலன்களைக் காப்பதோடு மட்டுமல்லாமல், தேசத்தின் பொது நலனுக்காகவும், சாமானிய உழைக்கும் மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் உங்களது இந்த அமைப்பு பாராட்டுக்குரியது. காலிப்பணியிடங்களும் பணிச்சுமையும் ஒன்றிய அரசுத் துறைகளில் ஊழி யர்களின் எண்ணிக்கை திட்டமிட்டே குறைக்கப்படுகிறது.
ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இன்று 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்த போதிலும், காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இது எஞ்சியுள்ள ஊழியர்களின் பணிச்சுமை யை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தணிக்கை போன்ற மிக முக்கியமான துறையில் இத்தகைய ஆள் குறைப்பு, பணிகளின் தரத்தையும் வேகத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
அரசு ஒருபுறம் நிரந்தரப் பணியாளர்க ளைக் குறைத்துக்கொண்டு, மறுபுறம் குறைவான ஊதியத்தில் தற்காலிகப் பணி யாளர்களை அமர்த்துகிறது. அதற்கும் மேலாக, ‘அவுட்சோர்சிங்’ என்ற பெயரில் தணிக்கைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது, ஒரு தன்னாட்சி அமைப்பின் நம்பகத்தன்மை யைக் குலைக்கும் செயலாகும். அரசியலமைப்புச் சட்ட அமைப்புகள் மீதான தாக்குதல் இந்த கார்ப்பரேட் - மதவாத அரசு, இந்தியாவின் சுதந்திரமான அரசியல மைப்புச் சட்ட அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், சிஏஜி (CAG) போன்றவற்றைத் திட்ட மிட்டுத் தகர்த்து வருகிறது. இந்த அமைப்பு கள் அச்சமின்றிச் செயல்பட வழங்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் இன்று பறிக்கப்படு கிறது.
நாடாளுமன்றத்தில் கூட முறையான விவாதங்கள் இன்றி விவசாயச் சட்டங்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் போன்ற முக்கியமான மசோதாக்கள் நிறைவேற் றப்படுகின்றன. இது ஜனநாயகத்தின் வீழ்ச்சியையும், பாசிசத்தின் வருகை யையுமே காட்டுகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் அவலநிலை: 1:10 என்ற விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் தொழிலா ளர் வர்க்கத்தின் சூழல் தலைகீழாக மாறியுள்ளது.
முன்பு ஒரு தொழிற்சாலை யில் அனைவரும் நிரந்தரப் பணியாளர்க ளாக இருந்தனர். ஆனால் இன்று, ஹூண்டாய் போன்ற நவீன தொழிற்சாலை களில் 2,000 பேர் நிரந்தரத் தொழிலாளர் கள் என்றால், 8,000 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர். பல நிறுவ னங்களில் இந்த விகிதம் 1:10 என்ற அளவில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களிலும் இதே நிலைதான். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) நிரந்தரத் தொழிலா ளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிகம்.
வடசென்னை அனல் மின் நிலையம் போன்ற அதிமுக்கியமான துறைகளில் கூட 100 சதவீதம் ஒப்பந்தத் தொழிலாளர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது ‘தொழில் புரிவதை எளிதாக்குதல்’ என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் ஈவிரக்கமற்ற சுரண்டலாகும். தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்: நவீன அடிமைத்தனம் 29 தொழிலாளர் சட்டங்களை உள்ள டக்கி 4 சட்டத் தொகுப்புகளாக (Labour Codes) அரசு மாற்றியுள்ளது. இதன் முக்கிய நோக்கமே தொழிலாளர்களின் உரிமைக ளை ஒழித்து அவர்களை அடிமை நிலை க்குத் தள்ளுவதுதான்.
H வேலை நேரம்: 8 மணி நேர வேலையை அதிகரித்து, தொழிலாளர்களைச் சுரண்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. Hவேலை பாதுகாப்பு: ‘அமர்த்து, துரத்து’ (‘Hire and Fire’) முறை சட்டப்பூர்வமாக் கப்பட்டுள்ளது. ‘அக்னிவீர்’ போல குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு (Fixed Term Employment) முறை திணிக்கப் படுகிறது. Hதண்டனை பறிப்பு: முதலாளிகள் சட்டத்தை மீறினால் சிறை தண்டனை கிடை யாது, அபராதம் மட்டும் கட்டினால் போதும். ஆனால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சிறைத்தண்டனை உண்டு. இது ‘முதலாளிகளுக்குக் குற்ற விலக்கு, தொழிலாளர்களுக்குக் குற்ற வாளிப் பட்டம்’ என்ற கொள்கையாகும். H பாதுகாப்பு: தொழிலாளர் ஆய்வாளர் (Inspector) என்ற பதவி நீக்கப்பட்டு, ‘உதவி செய்பவர்’ (Facilitator) என்று மாற்றப் பட்டுள்ளது.
சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் கொண்டவர்கள் இன்று கார்ப்ப ரேட்டுகளுக்கு உதவி செய்பவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். சாம்சங் போராட்டம் தந்த பாடம் சாம்சங் நிறுவனத்தில் 37 நாட்கள் நடை பெற்ற வீரமிக்கப் போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். “எங்கள் நிறுவனத்தில் எங்கும் சங்கம் கிடையாது, இங்கும் அனுமதிக்க மாட்டோம்” என்று அந்த பன்னாட்டு நிறு வனம் அறிவித்தது. ஆனால், 16 ஆண்டு கால சுரண்டலுக்குப் பிறகு தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர்.
அரசாங்கம் அந்நிய முதலீட்டைக் காரணம் காட்டி சங்கத்தைப் பதிவு செய்ய மறுத்தது. இறுதியில் தொழிலா ளர்களின் ஒற்றுமையே வெற்றி பெற்றது. ஏகாதிபத்தியமும் போரும் இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏகாதிபத்தியம். அமெரிக்கா இயற்கை வளங்களை தனது சொந்த மூலதனமாகக் குவிக்க, வெனிசுலா, இராக், லிபியா போன்ற நாடுகளைச் சிதைத்துள்ளது. தற்போது ஈரான் - இஸ்ரேல் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தை, குறிப்பாக பெட்ரோலிய விலையேற்றத்தின் மூலம் சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும், டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகப் போர்களும் மனிதநேயமற்றவை.
சோசலிசமே தீர்வு நிரந்தர அமைதியும் சமத்துவமும் நிலவ வேண்டுமானால், சமத்துவமான சமூக ஒழுங்கு (Socialist Order) மட்டுமே தீர்வா கும். உங்கள் சங்கத்தின் பணி அலுவலகச் சுவர்களுக்குள் மட்டும் முடிந்துவிடுவ தில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்து டன் நீங்கள் கைகோர்க்க வேண்டும். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! ஏகாதி பத்தியம் ஒழிக! சோசலிசமே மாற்று!
