புதிய இந்தியா: ஒரு இரத்தமற்ற அரசியல் இனப்படுகொலை
“இந்தியாவின் சமகால அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்குகளை உண்மையான தரவுகளோடு, துணிச்சலோடும் அறச்சீற்றத்தோடும் விமர்சித்து வருபவர் பிரபல பொருளாதார வல்லுநர் பரக்கலா பிரபாகர். சென்னையில் கடந்த மார்ச் 12 அன்று நடைபெற்ற தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் அவர் ஆற்றிய உரை, இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பு எவ்வாறு மெல்ல மெல்லச் சிதைக்கப்பட்டு வருகிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. ‘புதிய இந்தியா’ என்ற முழக்கத்தின் பின்னே மறைந்துள்ள வேலையின்மை, கார்ப்பரேட் ஆதிக்கம் மற்றும் வாக்காளர் நீக்கம் போன்ற அபாயங்களைச் சுட்டிக்காட்டும் அவர், இது ஒரு ‘இரத்தமற்ற அரசியல் இனப்படுகொலை’ என்று எச்சரிக்கிறார். உழைக்கும் வர்க்கமும், தணிக்கை அமைப்புகளும் எத்தகைய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது அவரது உரை:
இன்று நாட்டில் நிலவும் சூழலைக் கண்டு ஒரு எச்சரிக்கையை விடுக்க வேண்டியது எனது கடமையாகிறது. இதை நான் ஒரு அச்ச மூட்டும் நோக்கில் சொல்லவில்லை, மாறாக ஒரு தார்மீக எச்சரிக்கையாகவே சொல்கிறேன். ஜனநாயகமும் நமது அடையாளங்களும் இப்போது இருப்பதைப் போலவே நிலைமை நீடித்தால், இது போன்ற கூட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு இனி நமக்குக் கிடைக்குமா என்பது சந்தே கமே. வரும் ஆகஸ்ட் 15 அன்று செங்கோட் டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட லாம், ஆனால் அடுத்த ஆண்டு அதே இடத்தில் வேறு ஒரு கொடி பறக்கக்கூடும்.
சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்ச கம் ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஒன்றிய அரசு விழாக்களில் இனி ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களும் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும். அதன் பிறகே ‘ஜன கண மன’ பாடப்பட வேண்டும். இது ஒரு தொ டக்கம்தான். காலப்போக்கில் நேரம் இல்லை என்று கூறி ‘ஜன கண மன’ பாடப் படுவதையே தவிர்த்துவிட்டு, வந்தே மாதரத்தோடு மட்டும் முடித்துக்கொள் ளும் காலம் வரலாம்.
எந்த நாட்டிலும் சர்வாதிகாரமோ அல்லது பாசிசமோ ஒரே நாளில் திடீரென வந்துவிடுவதில்லை. உலக நாடுகளில் 60-களிலும் 70-களிலும் திடீ ரென ஒரு நள்ளிரவில் ராணுவத் தளபதி வானொலியில் தோன்றி, அரசியலமைப் புச் சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், ஜனாதிபதி கைது செய்யப்பட்டதாகவும் அறிவிப்பார். ஆனால் இன்று, இந்தி யாவிலும் உலகின் பல நாடுகளிலும் நம் கண்களுக்கு முன்பாகவே மெல்ல மெல்ல மாற்றங்கள் நடக்கின்றன.
ஒவ் வொன்றும் நாம் அதற்குப் பழகிப்போ கும் வகையில் மிக நிதானமாக அரங் கேற்றப்படுகிறது. சிலருக்கு அது பிடிக்கும் நிலைக்குக் கூட அவர்கள் மாற்றப்படுகிறார்கள். ‘யாசிக்கும்’ நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளர்கள் இன்றைக்கு மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான சமன்பாடு முற்றிலுமாக மாறிவிட்டது. தொழிலாளர்க ளுக்கு இன்று ‘பேரம் பேசும் சக்தி’ (Bar gaining Power) என்பது கிடையாது, அது ‘யாசிக்கும் சக்தியாக’ (Begging Power) மாற்றப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் இன்று ‘வேலை உருவாக்குபவர்கள்’ (Job Creators) அல்லது ‘செல்வத்தை உருவாக்குப வர்கள்’ என்ற பிம்பத்துடன் வருகிறார்கள்.
“தொழிற்சங்கங்கள் இருந்தால் முதலீடு செய்ய மாட்டோம், ஒற்றைச் சாளர அனுமதி வேண்டும், தொழிலாளர் சட்டங் கள் இருக்கக் கூடாது” என்ற நிபந்தனை களை அவர்கள் விதிக்கிறார்கள். அர சாங்கமும் ‘தொழில் புரிவதை எளிதாக்கு தல்’ (Ease of Doing Business) என்ற பெயரில் நிரந்தர வேலைவாய்ப்பை ஒழித்து, ஒப்பந்த முறைக்கு மாறுகிறது. அரசாங்கம் 100 தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேசுவதற்குப் பதில் ஒரு ஒப்பந்ததாரருடன் மட்டும் பேசுகிறது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு முற்றிலுமாகப் பறிக்கப்படுகிறது. தேசபக்தி என்ற சந்தைப்பொருள் 80-களில் என்.டி. ராமாராவ் போன்ற வர்கள் கம்யூனிஸ்ட்டுகளை உண்மை யான தேசபக்தர்கள் என்று அழைப்பார் கள்.
அவர்கள் ஏழைகளுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் சிந்திப்ப வர்கள் என்ற பொதுவான கருத்து நிலவியது. ஆனால் இன்று, அவர்கள் ஒரு இடையூறாகக் கருதப்படுகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள் இன்று தங்களை தேசபக்தர்களாகச் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு சோப் விளம்ப ரத்தைப் போலத் தேசபக்தியும் இன்று விற்கப்படுகிறது. ஆச்சரியம் என்ன வென்றால், மக்கள் அதை நம்புகிறார்கள்.
சுதந்திரப் போராட்ட வரலாறு தெரியாத தலைமுறைக்கு முன்னால் இந்த போலி யான தேசபக்தி இன்று வெற்றிகரமாக விற்கப்படுகிறது. வாக்காளர்களைத் தீர்மானிக்கும் அரசு மக்கள்தான் அரசாங்கத்தைத் தீர்மா னிக்க வேண்டும் என்பதுதான் வழக்கம். ஆனால் ‘புதிய இந்தியாவில்’ அரசாங் கமே வாக்காளர்களைத் தீர்மானிக்கி றது. உத்தரப்பிரதேசத்தில் 3 கோடி வாக் காளர்கள், தமிழ்நாட்டில் 70 லட்சம், கேர ளாவில் 24 லட்சம் என நாடு முழுவதும் சுமார் 16.5 கோடி வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை யோடு ஒப்பிடும்போது இது சிறிய எண்ணாகத் தோன்றலாம்.
ஆனால், உலகில் உள்ள 85 சதவீத நாடுகளின் மக்கள் தொகையே 16.5 கோடிக்கும் குறைவுதான். அதாவது ஒரு நாட்டையே இந்தியாவிலிருந்து வெளியேற்று வதற்குச் சமமான வேலை இது. வாக்கா ளர் பட்டியலைச் சுத்தம் செய்கிறோம், இறந்தவர்கள் பெயரை நீக்குகிறோம் என்று கூறிக்கொண்டே ஒரு பெரிய மக்கள் கூட்டத்தையே அரசியல் நீக்கம் செய்யும் வேலை நடைபெறுகிறது. பொருளாதாரச் சீரழிவும் தணிக்கையின் அவசியமும் நாட்டில் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. குறிப்பாகப் படித்த இளை ஞர்கள் மத்தியில் இது 60-65 சதவீதமாக இருக்கிறது.
பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. நகர்ப் புறங்களில் வேலை தேடிச் சென்றவர்கள் இப்போது கிராமங்களுக்குத் திரும்பும் நிலை (‘Reverse Migration’) தொடங்கிவிட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தணிக்கையாளர்க ளான உங்களின் பங்கு முக்கியமானது. அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்க ளில் 94 சதவீத பயனாளிகள் போலியான வர்கள் என்பதை உங்கள் அமைப்புகள் கண்டுபிடித்தன. ஒரே தொலைபேசி எண், ஒரே மின்னஞ்சல் முகவரி ஆயிரக் கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டி ருந்தன.
ஆனால் இவ்வளவு பெரிய முறை கேடு நடந்தும் நாடு ஏன் எதிர்வினையாற்ற வில்லை? ஏனென்றால், “தேர்தலில் மக்கள் ஆணை (Mandate) பெற்று விட்டால் எந்தப் பொறுப்புக்கூறலும் (Accountability) தேவையில்லை” என்ற ஆபத்தான எண்ணம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. அரசியல் சமூகத்தின் மாற்றம்: ‘இந்து இஸ்ரேல்’ மாடல் இந்தியா என்பது ஒரு தனித்துவமான முயற்சி. ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ ஒரு தேசம் என்பது மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் உருவானது. ஆனால் இந்தியாவில் மதம், சாதி, மொழி கடந்து இந்த எல்லைக்குள் வாழும் அனைவரும் குடிமக்கள் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. முன்பெல்லாம் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் என்று பேசி னார்கள்.
ஆனால் இப்போது அது ‘இந்து இஸ்ரேலாக’ மாற்றப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் எப்படி ஒரு மதம் என்பது அரசு அடையாளமாக இருக்கிறதோ, அதே நிலை இங்கும் உருவாகிறது. குடிமக்களைக் கொல்லாமல் ‘குடியு ரிமையை’ கொல்லும் முயற்சி நடக்கி றது. உங்களுக்கு வாக்குரிமை இல்லை யென்றால் எந்த அரசியல்வாதியும் உங்கள் பகுதிக்கு வரமாட்டார்கள். குடி மகன் உயிருடன் இருப்பார், ஆனால் அவர் அரசியல் ரீதியாகச் செத்துவிடு வார். இது ஒரு ‘இரத்தமற்ற அரசியல் இனப்படுகொலை’. எதிர்காலத்திற்கான தீர்வு தொழிலாளர் சங்கங்கள் இன்று பலவீனமாக உள்ளன. தொழிலாளர்கள் வேலை இழப்புக்கும் இ.எம்.ஐ (EMI) க்கும் பயப்படுகிறார்கள்.
போராட்டத்தி ற்கு அழைத்தால் அனைவரும் வாட்ஸ் அப் குழுவில் இருக்கிறார்கள், ஆனால் நேரில் வரத் தயங்குகிறார்கள். இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. உங்கள் சங்கத்தில் 100 பேரில் 10 பேர் தான் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், மற்ற துறைகளில் உள்ள 10 பேருடன் இணைந்து ஒரு ‘கிடைமட்ட ஒருங்கிணைப்பை’ (Horizontal Integration) உருவாக்க வேண்டும். மூல தனம் இன்று சர்வதேச அளவில் ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது, ஆனால் உழைப்பு என்பது தேச எல்லைக்குள் சுருங்கிப் போயிருக்கிறது. தேசிய அளவிலும், மாநில எல்லைகளைக் கடந்தும் தொழி லாளர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த ஏகாதிபத்தியச் சூழலை எதிர் கொள்ள முடியும்.
