எதிர்ப்பை மீறி பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் வெறுப்புப் பேச்சுக்களை கக்கும் இந்துத்துவா குண்டர்கள்
டி-20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக 100 பந்துகளைக் கொண்ட பிரிட்டனை மையமாகக் கொண்டு ‘தி ஹண்ட்ரட் லீக்’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் மொத்தம் 8 அணி கள் இருக்கின்றன. இதில், 4 அணி களை (மான்செஸ்டர் சூப்பர் ஜெய ண்ட்ஸ், எம்ஐ லண்டன், சன்ரைசர்ஸ் லீட்ஸ், சதர்ன் பிரேவ்) இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்கு களை வைத்துள்ளனர். இந்தத் தொட ருக்கான வீரர்கள் ஏலம் வியாழ னன்று லண்டனில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக் காக உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் டேனில் வெட்டோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 2.34 கோடி) ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் அணி. இந்நிலையில், தமிழ்நாட்டின் சன் குழுமத்திற்கு சொந்தமான சன்ரை சர்ஸ் அணி தரப்பில் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்ததால், அந்த அணிக்கு எதிராக பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா குண்டர்கள் வெறுப்புப் பேச்சுக்களை கக்கி வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளங்களில் #ShameOnSRH, #BoycottSunrisers உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் இந்துத்துவா குண்டர்கள் அரசியல் ஆதாயத்துடன் புலம்பி வருகின்றனர். அதே சமயம் பாகிஸ்தான் அணி வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் டுவிட்டர் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ‘தி ஹண்ட்ரட் லீக்’ தொடரில் இந்திய நிறுவனப் பங்கு களை அதிகமாகக் கொண்டுள்ள அணிகள், ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் களை தங்கள் அணியில் எடுக்க மாட்டார்கள் என்ற தகவல்கள் வெளி யாகியிருந்தன. ஆனால் இங்கி லாந்து கிரிக்கெட் வாரியம் ‘தி ஹண்ட்ரட் லீக்’ தொடரில் அங்கம் வகிக்கும் அணி உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காவ்யா மாறனுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு
வெளிநாட்டில் நடந்த நிகழ்வு களுக்கு பெண் என்று கூட பாராமல் சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறனுக்கு எதிராக இந்துத்துவா குண்டர்கள் வெறுப்புப் பேச்சுகளுடன் விவாதத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் மறுபக்கம்,”நாங்கள் இந்தியாவிலேயே சாதி, மதம் பார்க்க மாட்டோம் ; பிரிட்டன் மண்ணில் எப்படி? விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். காவ்யா மாறனுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்” என இந்திய ரசிகர்கள் அமோக ஆதரவு அளிக்க தொடங்கி யுள்ளனர்.
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் அல்காரஸ் அபாரம்
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான இந்தியன் வெல்ஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி வெள்ளியன்று அதிகாலை நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனின் நோரியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அல்காரஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இத்தாலியின் சின்னர், ரஷ்யாவின் மெத்வதேவ் ஆகியோரும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் 4ஆவது சுற்றில் ஜோகோவிச்சை வீழ்த்திய டிராப்பரை மெத்வதேவ் எளிதாக வீழ்த்தினார். ஸ்வியாடெக் அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் சுவிட்டோலினாவை எதிர்கொண்டார். மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 4-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, சுவிட்டோலினா அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். கஜகஸ்தானின் ரைபகினா, செக் குடியரசின் நோஸ்கோவா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
