கல்வியாளர் மற்றும் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் தடுப்புக் காவலை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் லடாக்கில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளான மாநில அந்தஸ்து, லடாக்கை அட்டவணை 6-இன் கீழ் சேர்ப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை நிறைவேற்றக்கோரி சோனம்வாங்சுக் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரது இந்த அமைதி போராட்டம் வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது எனக்கூறி ஒன்றிய அரசு தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தது.
இந்த தடுப்புக் காவலை எதிர்த்து வாங்சுக்கின் மனைவி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் வாங்சுக் பேசியதை விட அதிகமான வார்த்தைகளை அரசாங்கம் மொழிபெயர்த்திருப்பதாக நீதிமன்றமும் கண்டித்திருந்தது.
இந்நிலையில் 6 மாதங்களுக்குப்பிறகு சோனம் வாங்சுக்கிந்தடுப்பு காவலை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
