games

img

விளையாட்டு

குளிர்கால பாராலிம்பிக் 2026 பதக்கப் பட்டியலில் சீனா ஆதிக்கம்

குளிர்கால பாராலிம்பிக் தொடரின் 14ஆவது சீசன் இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதி மற்றும் லோம்பார்டி பகுதிகளில் மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. மார்ச்  15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த  தொடரில் 55 நாடுகளில் இருந்து 612 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ள னர். மொத்தம் 6 விளையாட்டுகளில் 79 பிரிவுகளுக்கு போட்டிகள் (பதக்கப் பிரிவு) நடைபெறுகின்றன.  குறிப்பாக வீல்சேர் கர்லிங்கில் முதன்முறையாக ‘கலப்பு இரட்டை யர்’ பிரிவு இந்த தொடரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. குளிர்கால பாராலிம்பிக் என்பது மாற்றுத்திற னாளிகளுக்கான போட்டிகள் என்பதால், வீரர் - வீராங்கனைகளுக்கு உதவி செய்ய 18,000 தன்னார்வலர் கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீனா அசத்தல் இந்த குளிர்கால பாராலிம்பிக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று மாலை நிலவரப்படி பதக்கப்பட்டிய லில் சீனா 9 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரியா 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 3 தங்கம், 5  வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங் களுடன் 3ஆவது இடத்திலும், போட்டியை நடத்தும் இத்தாலி 3 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 9  பதக்கங்களுடன் 4ஆவது இடத்திலும், உக்ரைன் 3 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.  பிரேசில் புதிய சாதனை பிரேசில் தனது குளிர்கால பாரா லிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கத்தை யும் (வெள்ளி) வென்று, புதிய வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வெப்ப மண்டல நாடு, முதல் லத்தீன் அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடு என்ற பெருமையை பிரேசில் பெற்றுள்ளது. இந்தியா இல்லை சமீபத்தில் நிறைவு பெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில், இந்தியா சார்பில் 2 வீரர்கள் பங்கேற்று இருந்தனர். இருவரும் பதக்கம் வெல்லவில்லை. ஆனால் குளிர் கால பாராலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் வீரர்கள் யாரும் பங்கேற்க வில்லை. 141 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா வில் பல்வேறு இடங்களில் பனிப் பொழிவு சாதகமான சூழல் இருந்தும், குளிர்கால பாராலிம்பிக் தொடரில் ஒருவர் கூட பங்கேற்காதது சோகமான விஷயம். ஆனால் மோடி அரசு இதற்கு ஊக்கமளிக்காதது மோசமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

கபடி வீராங்கனை  சோனாலி சின்கேட்டிற்கு  சிறந்த சேவைக்கான விருது

மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ரயில்வே மகளிர் நல மத்திய அமைப்பு நடத்திய மகளிர் விருது 2026 நிகழ்ச்சியில், இந்திய கபடி மகளிர் அணி கேப்டனும், மேற்கு ரயில்வே அணி வீராங்கனையுமான மகாராஷ்டிராவின் சோனாலி சின்கேட்டிற்கு “சிறந்த சேவைக்கான விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டது

ஈரான் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்

ஈரான் போர் தொடங்கிய சமயத்தில், ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தஞ்சம் அளித்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தார். ஆசியக் கோப்பை தொடருக்காக கடந்த மாதம் ஆஸ்திரேலியா வந்திருந்த ஈரான் அணி, பிப்., 28 அன்று ஈரான் போர் தொடங்கியதால் நாடு திரும்ப முடியாத சூழலில் இருந்தது. கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த ஈரான் வீராங்கனைகளை, ஆஸ்திரேலிய காவல்துறையினர்  பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். உள்துறை அமைச்சர் டோனி பர்க்  ஈரான் வீராங்கனைகளைச் சந்தித்து, அவர்களுக்கான மனிதாபிமான விசா நடைமுறைகளை நிறைவு செய்தார்.