இசைத்தட்டு வெளியீடு
தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூர் பெரிய கோவில் அறநிலையத் துறை அலுவலகத்தில், கலைமாமணி வளப்பக் குடி வீரசங்கர் இயற்றி இசையமைத்துப் பாடி யுள்ள அருள்மிகு பிரகன் நாயகி சமேத பிரக தீஸ்வரர் பக்திப்பாடல் இசை வெளியீடு புதன் கிழமை நடந்தது. வீடியோ இசைத் தட்டை அரண்மனை தேவஸ் தான உதவி ஆணையர் கோ.கவிதா வெளியிட, அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில் கண்கா ணிப்பாளர் டி.கோவிந்த ராஜூ பெற்றுக் கொண் டார்.
தனியார் நிறுவனத்தில் திருடிய இருவருக்கு சிறை
தஞ்சாவூர், மார்ச் 11 - தஞ்சாவூரை அடுத்த செங்கப்பட்டியில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்துக்கு சொந்த மான இருப்பு குடோன் உள்ளது. இதில் வைத்தி ருந்த 125 மீட்டர் கேபிள் வயர்கள், 4 நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் மின் மோட்டார்களை சுத்தம் செய்யும் 7 அடுக்கு கொண்ட சல்லடை திருட்டு போயின. இதுகுறித்து அந்நிறு வனத்தின் மேலாளர் ஆனந்த் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தினர். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ஜோஸ் வின் சிசாரா மற்றும் காவல்துறையினர் வழக் குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வல்லம் பெரியார் நகரைச் சேர்ந்த கபாலி என்ற தமி ழரசன் (24), வல்லம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த அர விந்த (23) ஆகியோர் திரு டியது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு செவ்வாய்க் கிழமை தஞ்சை குற்ற வியல் நீதிமன்றம் எண்-3 இல் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ராஜேஷ் கண்ணன் நடத்தி, கபாலி என்ற தமிழ ரசன், அரவிந்த் ஆகிய 2 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தஞ்சாவூரில் 2 நாட்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தஞ்சாவூர், மார்ச் 11 - தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உண வகங்களுக்கு தற்போதுள்ள சமையல் எரிவாயு உருளைகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் உள்ள தால், அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போர் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரும் பாலான உணவகங்கள், சிற்றுண்டிகள், டீ கடைகளில் 2 முதல் 4 நாட்களுக்கு தேவையான சமையல் எரிவாயு உரு ளைகள் கையிருப்பில் உள்ளதால், செவ்வாய்க்கிழமை தட்டுப்பாடு பிரச் சனை ஏற்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு உணவக உரி மையாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் நகரத் தலைவரும், தமிழ்நாடு பேக்கரி கூட்டமைப்பின் மாநிலத் தலைவரு மான எஸ்.பாண்டுரங்கன் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உண வகங்களில் 2 நாட்களுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனை இருக் காது. ஆனால், முன்பதிவு செய்த சமை யல் எரிவாயு உருளைகள் செவ்வாய்க் கிழமை வர வேண்டிய நிலையில், வர வில்லை. இந்நிலைமை 2 நாட்களில் சீராகி னால், பிரச்சனை இருக்காது. இல்லா விட்டால், சிறப்பு உணவுகளை நிறுத்தி விட்டு, மிக அத்தியாவசிய உணவு பொருள்களை மட்டும் தயாரிக்க வேண்டிய நிலை வரும். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தட்டுப்பாடு இன்றி சமையல் எரிவாயு உருளைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதேபோல, வீட்டு உபயோகத்துக் கான சமையல் எரிவாயு உருளை களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவு கிறது. இதனால், பெரும்பாலான மக்கள் முன்பதிவு செய்வதற்காக கைப்பேசி மூலம் முயற்சி செய்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சி செய்த தால், இணைப்பு கிடைக்காமல் சிர மத்துக்கு ஆளாகினர். இதனிடையே, சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சி யரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் தலைமையில் அலு வலர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோ சனை மேற்கொண்டனர். இதில், நுகர் வோர்களுக்கு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய நடவ டிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
தேர்வு எழுத வந்த மாணவிகள் உட்பட 20 பேரை கடித்துக் குதறிய தெருநாய்கள்
தஞ்சாவூர், மார்ச் 11– தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியகடை தெரு பகுதியில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே தெருநாய்கள் திடீரென பொது மக்களை துரத்திக் கடித்துள்ளன. அப்போது, பத்தாம் வகுப்பு மாணவிகளான ஹாசினி, சக்திபிரியா, ரித்திகா, மசிபா பானு, ஹேமா, அஸ்மிதா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவியான அக்சிதா ஆகியோரை தெருநாய்கள் துரத்தின. இதில் அச்சமடைந்த மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் ஓடினர். இருப்பினும் அவர்களை நாய் விடாது துரத்திக் கடித்துக் குதறியது. இதையடுத்து காய மடைந்த மாணவிகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் ஆறு மாணவி கள் முதலுதவி சிகிச்சை முடிந்து, மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு தேர்வு எழுதினர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவிகள் தேர்வு எழுதும் வரை, மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, மருத்துவர்கள் காத்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, தேர்வு முடித்த மாணவி களை சந்தித்து, மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரு நாள் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்க அழைத்து வந்தார். இதற்கிடையில், வெறிநாய் கடித்து காயமடைந்த பொது மக்கள் 13 பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களை, பட்டுக்கோட்டை நகராட்சி தலை வர் சண்முகப்பிரியா, எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை ஆகி யோர் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து நகராட்சி பணியாளர்கள் நாய்களை பிடித்துச் சென்றனர்.
சமூக நீதிக் காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா இன்று துணை முதல்வர் பெரம்பலூர் வருகை
பெரம்பலூர், மார்ச் 11 - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சமூக நீதிக் காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா மார்ச் 12 (வியாழன்) அன்று பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சமூக நீதிக் காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட உள்ளார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்காக பாலக்கரை பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு வருவதை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தினர். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிராபகரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், துணைத் தலைவர் து.ஆதவன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் டி.சி.பாஸ்கர், மரு.கருணாநிதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.