சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமிக்கு வரவேற்பு
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி கூட்டணிக் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரும் குமாரபுரம் பேரூராட்சி தலைவருமான ஜாண் கிறிஸ்டோபர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோர் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.
