வெள்ளியங்கிரி மலை ஏறியவர் உயிரிழப்பு
கோவை, ஏப்.3- கோவை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மலைப்பாதையில், மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம், பீடம்நேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23), கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் பார்ம்-டி ஐந்தாம் ஆண்டு பயின்று வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் தங்கி கல்வி பயின்று வந்த அவர், தனது நண்பர்களு டன் வியாழனன்று இரவு பூண்டி வெள்ளிங்கிரி ஆண்ட வர் கோவில் மலைப்பாதையில் பயணம் மேற்கொண் டார். இரவு சுமார் 10.00 மணி அளவில், அபி மற்றும் மகேந் திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் மலையேறத் தொடங்கிய முகேஷ் குமார், வெள்ளியன்று அதி காலை 02.00 மணி அளவில் ஐந்தாவது மலைப் பகுதியை எட்டிய போது திடீரென நெஞ்சு வலியால் துடித்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்த நிலையில், அங்கு இருந்த நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத சூழலில், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கோயில் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழு வினர், டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியு டன் உயிரிழந்த முகேஷ் குமாரின் உடலை மீட்டு, மலைப் பாதையில் இருந்து கீழே கொண்டு வந்த னர். உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தச் சம்பவம் மலையேற்றப் பிரியர்கள் மற்றும் சக மாண வர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்
உதகை, ஏப்.3- உதகை ஆட்சியர் அலுவலகம் செல்லும் நடை பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை கமர்சியல் சாலையிலி ருந்து ஆட்சியர் அலுவலகம், ஸ்டேட் பேங்க், ஜி1 காவல் நிலையம் உள்ளிட்டவற்றிற்கு செல்வதற்கு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கடைகள், வணிக வளாகங்கள் போன்றவைகளும் உள்ளன. இந் நிலையில், இந்த நடைபாதையில் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இன்டர்லாக் கற்கள் கொண்டு சீரமைக் கப்பட்டது. இவை தற்போது சேதமடைந்தும், இன்டர்லாக் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. எனவே, அதிகம் பயன்படுத்தப்படும் இந்த நடை பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள், வணிகர்கள் வலியுறுத்தியுள்ள னர்.
ஏற்காட்டில் திடீரென பயங்கர காட்டுத்தீ
சேலம், ஏப்.3- ஏற்காட்டியில் உள்ள சேர்வராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதால், உடனடியாக தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் இணைந்து தீயை முற்றிலும் அணைத்தனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீகத் தலமாகவும் விளங்கும் சேர்வ ராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் வெள்ளியன்று அதிகாலை திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த தாலும், காற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததாலும், காய்ந்த சருகுகளில் பற்றிய தீ கண் இமைக்கும் நேரத்தில் மளமளவென பரவியது. இந்த கோர விபத் தில் அந்தப் பகுதியில் இயற்கையாக வளர்ந்திருந்த சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான பல்வேறு அரிய வகை மூலிகைத் தாவரங்கள், மரங்கள் மற்றும் சிறு செடி கள் முற்றிலும் தீக்கிரையானது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தீய ணைப்புத் துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரி வித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு நிலைய வீரர்கள், வனப்பகுதி கரடுமுரடான பாதையாக இருந்ததால் தீயை அணைக்க கடும் சிரமப்பட்டனர். இருப்பினும், தீய ணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் இணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாகப் போராடி, தீ மேலும் பரவாமல் தடுத்து முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் வனப்பகுதிக ளில் தீ விபத்துகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடு பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு கோவை, ஏப்.3- கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக் கரை போளூவாம்பட்டி பகுதியில், வெள்ளியன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப் பாம்பால் பரபரப்பு நிலவியது. வீட்டில் இருந்த கோழியைத் தனது பிடியில் சிக்க வைத்து, விழுங்கு வதற்கு தயாராக இருந்த அந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந் ததும் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பாது காப்பாக அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் வனத்துறையினர், அதனை அருகில் உள்ள பாது காப்பான வனப்பகுதிக்குள் விடுவிக்க கொண்டு சென்றனர்.
உண்மையை விட நடிப்பிற்கு முதன்மை தருவது சரியல்ல
திருப்பூர், ஏப்.3 - உண்மையை விட நடிப்பிற்கு முதன்மை தருவது சரியல்ல என திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்டுவிழாவில் பங் கேற்ற கவிஞர் மதுக்கூர் ராமலிங் கம் தனது உரையில் தெரிவித்தார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வியாழ னன்று கல்லூரி திறந்த வெளி அரங் கில் நடைபெற்றது. கல்லூரி பேரா சிரியர் விநாயகமூர்த்தி வரவேற் றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் விளையாட்டு அறிக்கை வாசித்தார். ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், உண் மையை விட நடிப்பிற்கு முதன்மை தருவது சரியல்ல. எண் என்பது அடித்தளம் அதற்குப் பிறகு எழுத்து. எனவே தான் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று வள்ளு வர் கூறுகிறார். சாதி, மதம் பாராமல் அனைவருக்கும் கல்வியே உயிரா னது. பொருள் இருப்பவருக்கு சொல்லித் தருவதை விட இல்லாத வர்க்கு கற்பிப்பதே சிறப்பு. அறிவு என்பது இயல்பாக இருக்க வேண் டும். அறிவுரையை ஏற்றுக் கொள் ளும் பக்குவம் வேண்டும். தன்னம் பிக்கை முதலில் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். உன்னை நீ அறிதல் என்பது மிக மிக முக்கியமா னது. திறமை இல்லாதவர் எவரும் உலகில் இல்லை. உனக்குள் இருக் கும் திறனை அறிந்து வெளிப்ப டுத்தி வெற்றி பெற வேண்டும். உல கின் பெரிய சாதனைகள் சாதாரண மாகத்தான் தொடங்குகிறது. தன் னைப் பற்றியே தன் நோயைப் பற்றியே பேசுபவனால் பிறருக்கு உதவ முடியாது. மற்றவரின் துன் பத்தைத் தன்னுடையதாக நினைப் பவனே நல்ல மனிதன். இயற்கையை காக்க வேண்டும். பறவை இனங்களுக்கும், விலங்கி னங்களுக்கும் தண்ணீர் தருவது மனிதனின் தலையாயக் கடமை. எனவே மரங்களை வெட்டாதீர். நிறம் அறிவைத் தராது. அறிவுத் திறன் தான் அறிவைக் கொடுக்கும். எனவே இயல்பான அறிவோடு பெற்றோரை மதித்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றார். விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராக மெஜஸ்டிக் கந்த சாமி கலந்து கொண்டார். ஒவ் வொரு பாடப்பிரிவில் கல்லூரி அள வில் முதல் மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட் டது. மாணவர்களுக்கிடையே நடை பெற்ற விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தை (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்) வைகை அணி பெற்றது. நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற் றனர்.
பூங்காவில் நடைபயிற்சிக்கு கட்டணம்: வாக்குவாதம்
சேலம், ஏப்.3- பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் நடைபயிற்சிக்கு கட்டணம் விதிக்கப்பட்டதால், குத்தகைதாரரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவை நெத்திமேட்டை சேர்ந்த தியாகராஜன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஏற்கனவே இந்த ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் நிதிப்பங்களிப்போடு நடைபயிற்சி பாதையாக அமைக்கப் பட்டு, அதில் நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஏரி பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக் கப்பட்ட பிறகு திடீரென நடை பயிற்சி செய்பவர்களுக்கு மாதம் 300 ரூபாய் என கட்டணம் விதிக்கப்பட்டதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனியார் ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்ட போது முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று அப்பகுதியில் குவிந்த நடை பயிற்சியாளர்கள், குத்தகைதார ரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பள்ளப் பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்த னர். தற்காலிகமாக கட்டண விதிப்பிற்கு ஒரு மாத காலத் திற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு ஈரோடு, ஏப்.3- 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தால், தேர்தல் வாக்களிப்பற்காக ஈரோடு மாவட்டத்தில் பணி யாற்றும் அந்தந்த மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத் துடன் விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது. இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் ஆணையர் கோ.ஜெய லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அசாம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அசாம், கேர ளம், புதுச்சேரி மாநிலங்களில் ஏப்.9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் வாக்குரிமை உள்ள ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தேர்தல் நாளில் தம் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135 (பி)-இன் படி வேலையளிப்பவர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழி லாளர் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு 0424-2270090 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அரசு பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் உதகை, ஏப்.3- வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்நிலை யில், நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு போக்குவரத்துக் கழ கத்தில் நடத்துநராக பணியாற்றும் நெடுஞ்செழியன் என்ப வர், வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து நெடுஞ்செழியனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத் துள்ளனர்.