எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் 16 சதவீதம் என உடன்பாடு
திருப்பூர், ஏப். 3 - திருப்பூர் அனுப்பர்பாளையம் வட்டாரத்தில் எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 16 சதவிகிதம் கூலி உயர்வு வழங்குவதென தொழி லாளர் துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்றப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டது. திருப்பூர் அனுப்பர்பாளையம் வட்டார பாத்திரத் தொழிலாளர்க ளுக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந் தம் தொடர்பான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்று வந் தது. தொடக்கத்தில் எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி சார்பில் 50 சதவீத கூலி உயர்வு கோரிக்கை விடுத்திருந்த னர். இந்நிலையில், பாத்திரப் பட் டறைதாரர்கள் சங்க நிர்வாகிகளு டன் பல கட்ட பேச்சுவார்த்தை நடை பெற்றும் உடன்பாடு காணப்பட வில்லை. உற்பத்தியாளர்கள் சார் பில் 5 சதவீதத்தில் தொடங்கி, படிப் படியாக உயர்த்தி, கடந்த பேச்சு வார்த்தையின் போது 14 சதவீதம் தருவதாக தெரிவித்திருந்தனர். எனினும், பாத்திரத் தொழிலா ளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்க வேண்டும் என பாத் திரத் தொழிலாளர் சங்க கூட்டுக் கமிட்டி சார்பில் காமாட்சியம்மன் சங்க மண்டபத்தில் நடைபெற்ற தொழிலாளர் சிறப்புப் பேரவை யில் வலியுறுத்தப்பட்டது. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தையில் நியாய மான கூலி உயர்வு காணாவிட்டால் பொருத்தமான போராட்ட நடவ டிக்கை மேற்கொள்வதற்கு கூட்டுக் கமிட்டிக்கு அனுமதி வழங்கி இந்த பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி ஆணையர் பிரேமா முன்னிலை யில் வியாழக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் கூட்டுக்கமிட்டி சார்பில் வேலுச்சாமி (எல்.பி.எப்.), கே.ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), குணசேகரன் (ஏ.டி.பி.), செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), பாண்டிய ராஜன் (ஹெச்.எம்.எஸ்.), ஈஸ்வரன் (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூனன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகி யோர் கலந்து கொண்டனர். எவர் சில்வர் முழுக்கூலி பட்டறைதாரர் சங்கம் சார்பில் தலைவர் துரை சாமி, செயலாளர் தர்மாமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எவர்சில்வர் பாத்திர உற் பத்தியாளர்கள், கடந்த முறை பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட 14 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதம் அதிகரித்து, 16 சதவீ தம் கூலி உயர்வு தருவதாக முன் மொழிந்தனர். இதை தொழிற் சங்கங்களின் கூட்டுக் கமிட்டி ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உதவி ஆணையர் பிரேமா முன்னிலையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாலும், பித்தளை பாத்திரத் தொழிலாளர் கூலி உயர்வு பேச்சு வார்த்தை இன்னும் முடிவடைய வில்லை. பித்தளை பாத்திரம் உற் பத்தியாளர் சங்கம் சார்பில் 19 சத வீதம் தருவதாக கூறியதை, கூட்டுக் கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
