tamilnadu

img

புதுச்சேரியில் சிபிஎம் தலைவர்கள் பிரச்சாரம்

புதுச்சேரியில் சிபிஎம் தலைவர்கள் பிரச்சாரம்

புதுச்சேரி திருபுவனை தொகுதியில் போட்டியிடும்  வேட்பாளர் தட்சிணாமூர்த்தியை ஆதரித்து சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்  மதகடிப்பட்டு கடைவீதியில் வீதி வீதியாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் மாநில செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாநில குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும்  ராஜாங்கத்திற்கு ஆதரவு கோரி கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்  தொகுதி மக்களிடம் துண்டு அறிக்கை கொடுத்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.