tamilnadu

img

இணையம் இன்றி செயல்படும் ’ஏஐ’ மென்பொருள்

இணையம் இன்றி செயல்படும் ’ஏஐ’ மென்பொருள்

திருப்பூரைச் சேர்ந்த 13 வயது பள்ளி  மாணவர் கனிஷ்க்டன், இணைய  வசதி இல்லாமலேயே இயங்கக்கூடிய  ’கைல் ஏஐ’ (Kail AI) எனும் செயற்கை  நுண்ணறிவு மென்பொருளை உரு வாக்கி கவனம் ஈர்த்துள்ளார். திருப்பூரில் கேபிள் ஆபரேட்ட ராகப் பணிபுரியும் நாராயணசாமி - நிர் மலா தம்பதியினரின் இளைய மகனான இவர், தனது 11 வயதிலிருந்தே கணினி மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த தேட லில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் பய னாக தற்போது இந்த ’கைல் ஏஐ’ மென்பொருளை வடிவமைத்துள்ளார். பொதுவாகச் செயற்கை நுண்ண றிவு செயலிகள் இயங்குவதற்கு இணையத் தொடர்பு  அவசியமாகும். ஆனால், கனிஷ்க்குடன் உருவாக்கி யுள்ள இந்த மென்பொருள் இணை யம் இல்லாமலேயே கணினி மற்றும் கைபேசிகளில் நேரடியாகவும், வேக மாகவும் செயல்படும் வகையில் உள் ளது. இதில் Kail F1, Kail S1, Kail S2  எனப் பல்வேறு நிலைகளில் மாதிரி களை அவர் உருவாக்கியுள்ளார். பய னர் தகவல்கள் இணையத்தில் பகிரப் படாமல், சாதனத்திலேயே (Device) சேமிக்கப்படுவதால் இதில் தரவுப் பாது காப்பு உறுதி செய்யப்படுகிறது. இதுதவிர, பள்ளிகளின் நிர்வாகப் பணிகளான மாணவர் வருகைப் பதிவு,  கட்டணம் செலுத்துதல் மற்றும் பாடத் திட்டங்களை நிர்வகிக்கும் ’இஆர்பி’  மென்பொருளையும் இவர் எளிமை யான முறையில் வடிவமைத்துள்ளார். சமீபத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்கு னர் டாக்டர் மயில்சாமி அண்ணா துரையை நேரில் சந்தித்த மாணவர்  கனிஷ்க்குடன், தனது கண்டுபிடிப்பு கள் குறித்து விளக்கினார். இந்த முயற்சியைப் பாராட்டிய விஞ்ஞானி, அவருக்குத் தேவையான ஆலோ சனைகளை வழங்கினார். சாதாரண குடும்பப் பின்னணி யிலிருந்து வந்து, இளம் வயதிலேயே நாட்டின் தொழில்நுட்ப தேவைக் கேற்ப புதிய முயற்சிகளை மேற் கொண்டு வரும் இந்த மாணவனின் செயல் பலருக்கும் ஊக்கமாக அமைந் துள்ளது. (ந.நி)