இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்க ரஷ்யா முன்வந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா முன்வந்துள்ளது. இதனுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
ரஷ்யத் துணை பிரதமர் மான்ட்ரூவ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பின்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளாது.
மேலும், மான்ட்ரூவ், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ரஷ்ய அறிக்கையில், இந்திய சந்தைக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தை நிலையாக அதிகரிக்கும் திறன் ரஷ்ய நிறுவனங்களுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 இறுதிக்குள் இந்தியாவுக்கு உர விநியோகத்தை 40% அதிகரித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், புதுமை, முக்கிய கனிமங்கள் போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் ஆராயப்பட்டன.
மேலும், சிவில் அணுசக்தித் துறையில் இந்தியா - ரஷ்யா ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
