டி-20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு
ஞாயிறன்று குஜராத் மாநி லம் அகமதாபாத்தில் நடைபெற்ற 10ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி, 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது. இந்நிலையில், டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு ரூ.131 கோடி ரொக்கப் பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செவ்வாயன்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா அறிவிப்பில், “ஆடவர் டி-20 உலகக்கோப்பையை 3 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள் ளது. இதற்கு பரிசாக அணியில் விளை யாடிய 15 வீரர்கள் ஒவ்வொருவருக் கும் தலா ரூ.6 கோடி வழங்கப்படும். மீதமுள்ள ரூ.41 கோடி பயிற்சியாளர் கள் மற்றும் பிற உதவிப் பணியாளர் களுக்குப் பிரித்து வழங்கப்படும். அதா வது மொத்தம் ரூ.131 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என அவர் கூறினார். இதற்கு முன்னதாக, 2024இல் இந்தியா டி-20 உலகக்கோப்பையை வென்ற போது பிசிசிஐ ரூ.125 கோடி அறிவித்து, ஒவ்வொரு வீரருக்கும் ரூ.5கோடி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி ஊர்வலம் இல்லாமல் வீரர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த பிசிசிஐ
பொதுவாக உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் ஒரு நாடு சாம்பி யன் பட்டம் வென்றால், வெற்றி ஊர்வ லம் என்ற பெயரில் கோப்பையுடன் வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் நகர்வலம் வருவார்கள். இது பாரம்பரியமிக்க ஒரு நிகழ்வு ஆகும். 2024இல் 2ஆவது முறையாக டி-20 உலகக்கோப்பை வென்ற போது இந்திய அணி வீரர்கள் மும்பை மரின் டிரைவ் பகுதியில் பிரம்மாண்ட வெற்றி ஊர்வலம் சென்றனர். அதே போல இந்த முறையும் ரசிகர்கள் வெற்றி ஊர்வலத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் இந்திய அணி 3ஆவது முறையாக டி-20 உலகக் கோப்பை வென்று 3 நாட்கள் ஆகி யுள்ள சூழலிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெற்றி ஊர்வலம் குறித்த அதிகாரப் பூர்வ தேதியையோ, இடத்தையோ அறிவிக்கவில்லை. இத்தகைய சூழலில், இந்திய அணியில் வீரர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பி விட்டனர். கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் திங்களன்று இரவே திரு வனந்தபுரம் திரும்பிவிட்டார். இதற் கான காரணம் எதுவும் தெரியவில்லை. மார்ச் 15 - பாராட்டு விழா மார்ச் 15ஆம் தேதி தில்லியில் நடை பெறவுள்ள பிசிசிஐ ஆண்டு விரு துகள் விழாவில், உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு அதிகாரப் பூர்வமாகப் பாராட்டு விழா நடத்தப் படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறியுள்ளார். அதன்பிறகு பிரதமர் மோடியைச் சந்தித்தப் பின்பு மும்பையில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறை அணிகள் அடுத்தடுத்து தோல்வி
நாட்டின் காவல்துறை அணிகளுக்கான 2ஆவது தேசிய கபடி போட்டி ஜம்மு-காஷ்மீரில் மார்ச் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் தமிழ்நாடு காவல்துறை அணி லீக் சுற்றின் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இடம்பெற்று ‘குரூப் சி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிஆர்பிஎப் அணியை தமிழ்நாடு காவல்துறை அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 39-20 என்ற புள்ளிக் கணக்கில் சிஆர்பிஎப் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து தமிழ்நாடு காவல்துறை அணி வெளியேறியது. அதே போல மகளிர் காவல்துறை அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
