tamilnadu

img

ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் போராட்டம்

பெரம்பலூர், மார்ச் 11 - 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் 26 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். கேங்மேன் பணியா ளர்களை கள உதவியாளராக பதவி  மாற்றம் மற்றும் கேங்மேன் உள்ளிட்ட வர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய 6 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழி லாளர்களை அடையாளம் காண கமிட்டி அமைக்க வேண்டும்.  விடுபட்ட 1035 பகுதிநேரப் பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். மின்வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர் அலுவலர்களுக்கு ஊதிய  உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் அற வழிப் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  சிஐடியு சார்பில் நடைபெற்ற தர்ணா போ ராட்டத்திற்கு அமைப்பின் மாநில செய லாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். அமைப்பின் மின் அலுவலர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலை வர் நடராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், மின்துறை பொறியாளர் அமைப்பு மாநிலச் செயலாளர் இருதயராஜ், நிர்வாகிகள் நாகராஜ், மணிகண்டன், ராதா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர், வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.  டி.என்.இ.பி.எம்ப்ளாயீஸ் பெடரே ஷன் சார்பில் புதனன்று தென்னூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை  பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மெட்ரோ தலைவர் சத்யநாராயணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சிவச்செல்வன், நிர்வாகிகள் செந்தில்குமார், அன்பு செல்வன் ஆகியோர் பேசினர். அன்பழ கன் நன்றி கூறினார். திருவாரூர் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக திருவாரூர் மேற்பார்வை தொழிலாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் புதன் கிழமை நடைபெற்றது. போராட்டத் திற்கு அமைப்பின் திட்ட தலைவர் எஸ். சகாயராஜ் தலைமை ஏற்றார். மண்டல செயலாளர் கே.ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி கண்டன  உரையாற்றினார்.  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பி.ஜோதிபாசு, மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் கோரிக் கையை நிறைவேற்றிட கோரி உரை யாற்றினர்.  போராட்டத்தில் திட்டப் பொரு ளாளர் ஜி.முகேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீரபாண்டியன், வினோத், குமார், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.