tamilnadu

img

ஈரான் மீதான தாக்குதலுக்கு விவசாயிகள் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்கு விவசாயிகள் கண்டனம்

தஞ்சாவூர், மார்ச் 11 -  ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற் கொண்டு வரும் தாக்குதல் களைக் கண்டித்து, தஞ்சா வூர் மாவட்டம், பூதலூர் நான்கு ரோடு பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி  சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் தலைமை வகித் தார். இதில் சுபா சுந்தரவடி வேல், ராஜு, தமிழ்ச்செல்வன்,  வசந்தா, கண்ணன், ராம லிங்கம், கோவிந்தராஜ் உள் ளிட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண் டனர். ​போராட்டத்தின் ஒரு பகுதியாக, போர்ச் சூழலை உருவாக்கி அமைதியைச் சீர்குலைக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதி ராக முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மேலும், இந்தத் தாக்குதல்களைக் கண்டிக் கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள் தங்கள் எதிர்ப் பைப் பதிவு செய்தனர்.  திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம்  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் செவ்வா யன்று மண்ணச்சநல்லூரில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன் தலைமை வகித் தார். விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலா ளர் சுப்பு, சிபிஎம் இடைக் கமிட்டி உறுப்பினர்கள் நல்லையன், முருகேசன், வாழ்மால்பாளையம் கிளைச் செயலாளர் கார்த்தி ஆகியோர் பேசினர். இதில் வாழ்மால்பாளையம், தீராம் பாளையம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட னர்.