games

img

இந்திய வீரர்களின் கடின உழைப்பை மூடநம்பிக்கையுடன் குழிதோண்டி புதைத்த ஜெய் ஷா

இந்திய வீரர்களின் கடின உழைப்பை மூடநம்பிக்கையுடன் குழிதோண்டி புதைத்த ஜெய் ஷா

சஞ்சு, இஷான், அபிஷேக், துபே ஆகியோரின் மிரட்ட லான அதிரடி பேட்டிங் ; பும்ரா, அர்ஷதீப் சிங்கின் அசத்தலான வேகம்; அக்சர், வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால சூழல் மற்றும் ஒட்டு மொத்த இந்திய வீரர்களின் கடின உழைப்பால் 3ஆவது முறையாக டி-20 உலகக்கோப்பை சாத்தியமானது.  ஆனால் போட்டி முடிவடைந்த பின்பு, உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலை வர் ஜெய் ஷா (அமித் ஷா மகன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சி யாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் அருகில் உள்ள அனுமன் டெக்ரி கோவிலில் சென்று வழிபாடு நடத்தினர். மேலும் போட்டிக்கு முன்பு இந்த அனுமன் கோவிலில் பூஜை செய்ததாகவும், இதனால் தான் இந்தியாவிற்கு உலகக்கோப்பை கிடைத்ததாகவும் கூறியுள்ளனர்.  இதற்கு ரசிகர்கள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளனர். இந்திய வீரர் களின் கடின உழைப்பு மூடநம்பிக்கை யுடன் குழிதோண்டி புதைக்கப் பட்டுள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.