tamilnadu

img

குடியிருக்க இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறி போராட்டம்

குடியிருக்க இடம் கேட்டு வட்டாட்சியர்  அலுவலகத்தில் குடியேறி போராட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 11 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத் திற்குப்பட்ட 5 குக்கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்கள் குடியிருக்க இடம்  கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று காலை குடும்பத்துடன் குடியேறிய நிலையில் அங்கேயே தங்கி  உணவு சமைத்து உண்டு, இரவிலும் போராட்டத்தை தொடர்ந்னர். 2 ஆவது நாளான புதனன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  செவ்வாயன்று மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டக் குழு, மார்க்சிஸ்ட்  கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு அங்கேயே தங்கினர். இரண் டாவது நாளான புதனன்றும் போராட் டம் தொடர்ந்த நிலையில் மாவட்ட ஆட்சி யர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்பேரில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் சார்பில் பூம்புகார் தொகுதி மாவட்டச் செயலாளர் அன்பரசன், ஆக்கூர் செல்வஅரசு, கூட்டமைப்பு சார்பில் சமூக செயற்பாட்டாளர்கள் நெல்சன், விஷ்ணுகுமார், குமரேசன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். பட்டா  வழங்குவதற்கான பணிகளை துவங்கு வதாகவும், தீர்க்கப்பட வேண்டிய சிறிய சிக்கல்களை தீர்த்து வைத்து பட்டா வழங்குவதற்கான பணிகளை துவங்குவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்துள்ளதால், தற் காலிகமாக போராட்டத்தை கைவிடுவ தாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், டி.சிம்சன், அமுல் காஸ்ட்ரோ,  கே.பி.மார்க்ஸ், டிஜி.ரவி மற்றும்  மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர் கள், முன்னணி ஊழியர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வசிக்கும் அமைப்புகளின் நிர்வாகிகள், 5 கிராம மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.