மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள எல்.கே.சுதீஷ் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக-வில் இருந்து திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் இருந்து கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக-வில் இருந்து எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக-வில் இருந்து எம்.தம்பிதுரை, பாமக-வில் இருந்து அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து தேமுதிகவின் மாநிலப் பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானதற்காக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.