ஆர்ஜேடி எம்.பி., சஞ்சய் யாதவ்
பீகாரில் மதுவிலக்கு அமலில் இருந்தும், லட்சக்கணக்கான லிட்டர் மதுபானங்கள் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்படுகின்றன. பீகாரில் மது விற்பனையால் ஒரு நிழல் பொருளாதாரம் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். இதற்கு யார் பொறுப்பு?
தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்
சோனம் வாங்சுக் உலகின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவர். இந்திய ராணுவத்திற்காக அவர் பல விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால் 170 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற அழுத்தம் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி
சோனம் வாங்சுக் மீது வழக்குப் பதிவு செய்ததே தவறு. அவர் சுற்றுச்சூழலுக்காகவும் நாட்டுக்காகவும் எவ்வளவோ செய்திருக்கிறார். அவரை இவ்வளவு காலம் சிறையில் வைத்திருந்தது மிகமோசமானது. தற்போது விடுதலை செய்துள்ளார்கள். இதற்கான காரணம் விரைவில் தெரியவரும்.
பத்திரிகையாளர் ரன் விஜய் சிங்
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நாடு முழுவதும் உள்ள எரிவாயு ஏஜென்சி அலுவலகத்துக்கு வெளியே பயங்கரமான கூட்டமும், மிக நீண்ட வரிசைகளும் காணப்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் சிலிண்டருக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பூஷண் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.
