tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கிராவல் கடத்தல்: லாரி ஓட்டுநர் கைது

கோவை, ஜூலை 16- ஆலங்குட்டையில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டு நரை கைது செய்தனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள குப்ப னூர் ஊராட்சியை சேர்ந்த ஆலங்குட்டையில் சட்ட விரோதமாக மண் எடுத்து கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து அன்னூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் குருநாதன், தெற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் மருதாசலம், போலீசார் ஆகியோர் செவ்வாயன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது ஆலங்குட்டையில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த டிப்பர் லாரியும், லாரிக்கு மண் ஏற்றிய பொக்லின் இயந்திரமும் பிடிபட்டது. இதனை வருவாய்த் துறையினர் அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் ஜெயகண்ணன், ஓட்டுநர் நாகார்ஜுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஓட்டுநர் நாகார்ஜுனை கைது செய்து அன்னூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

குட்கா கடத்தல்: 3 பேர் கைது

சேலம், ஜூலை 16- பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு காரில் குட்காப் பொருட்களைக் கடத்தி வந்த 3 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு சொகுசு காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக சூரமங்கலம் காவல் துறை யினருக்கு புதனன்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மாமாங் கம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகை யில் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த தில், அதில் 203 கிலோ குட்காப் பொருட்கள் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன், அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவற்றைக் கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சேம்பால், சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ரோனாக் சிங், சேலம், ரெட்டிப்பட்டியை சேர்ந்த சுல்தான் கான் ஆகி யோரை கைது செய்தனர்.

கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

கோவை, ஜூலை 16- கருமத்தம்பட்டி அருகே 120 அடி கிணற்றில் விழுந்த நாய் ஒன்று, பத்திரமாக மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி புதூர் பகுதி யைச் சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கு சொந்தமான மேட்டுக்காட்டு தோட்டத்தில், அவரது வளர்ப்பு நாய் ஒன்று எதிர்பாராத விதமாக 120 அடி ஆழமுள்ள கிணற் றில் தவறி விழுந்தது. நாய் கிணற்றில் விழுந்து சத்தமிடு வதை அறிந்த உரிமையாளர் சாந்தாமணி, உடனடியாக கருமத்தம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையின ருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் பிற உபகரணங்க ளைப் பயன்படுத்தி, 120 அடி ஆழ கிணற்றில் இறங்கி  நாயை பத்திரமாக மீட்டனர்.