tamilnadu

img

போலீசாரின் காட்டுமிராண்டித்தனம்: வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

போலீசாரின் காட்டுமிராண்டித்தனம்: வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 16- தமிழக காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவ டிக்கையை கண்டித்து வாலிபர்  சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனத்தில் அஜித்குமார்  என்ற இளைஞர் காவல்நிலையத் தில் உயிரிழந்த சம்பவம் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. முத லில் வலிப்பு வந்ததாகக் காவல் துறை தெரிவித்தாலும், அவர் லத்தி களால் தாக்கப்பட்ட வீடியோ ஒன்று  வெளியானது. பிரேத பரிசோதனை யில் அவரது உடலில் காயங்கள்  இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. இந்த வழக்கில் ஐந்து காவ லர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர், மேலும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் இதை “கொடூரமான செயல்” என்று  கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட் டம் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் விக்கி என்ற இளை ஞர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற் படுத்தியது. கரூர் அருகே வெண் ணைமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், குறிப்பாக பெண்களை, காவல் ஆய்வாளர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி, தள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலா கியது. சென்னை, ஓக்கடம் பகுதி யில் காவல்துறை அதிகாரிகள் ஒரு  பிஎம்டபிள்யூ காரில் இருந்த ஒரு வரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, பொது வெளியில் தாக் கும் வீடியோ வெளியானது. அண் மைக்காலமாக, போலீசாரின் அத்து மீறல்கள் தமிழக அரசிற்கு பெரும் அவப்பெயரை உருவாக்குபவை யாக மாறியுள்ளது. கட்டற்ற சுதந் திரத்தை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளது போன்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது. அதேநேரத்தில், காவல் நிலையத் தில் நடக்கும் மரணங்கள் அல்லது  அத்துமீறல்களில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டா லும், அவர்களுக்கு தண்டனை கிடைப்பது என்பது மிக அரி தாகவே உள்ளது. மறுபுறம், காவல் துறையினரின் இத்தகைய நடவ டிக்கைகள், தமிழக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே செய்யப்படுவதாக அரசியல் விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளையும் புறந்தள்ளி விட முடியாது.  இந்நிலையில், அப்பாவி உழைக்கும் மக்கள் மீது காவல் துறையினர் நடத்தும் காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கை களை கண்டித்து, தருமபுரியில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் கே.சத்தியராஜ் தலைமை  வகித்தார். இதில் மாநில துணைச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி,  மாவட்டத் தலைவர் மா.குரளரசன்,  செயலாளர் எம்.அருள் குமார்,  பொருளாளர் எம்.சிலம்பரசன், வட் டச் செயலாளர் பி.கோவிந்தசாமி, நிர்வாகிகள் மீரா, வி.ரவி, எஸ்.அருண்குமார், ஜி.தேவிஸ்ரீ, அஜித் குமார், அலெக்ஸாண்டர், சுகதேவ்,  குருமூர்த்தி, சௌந்தரபாண்டியன், விஜய் உட்பட பலர் கலந்து கொண் டனர்.