tamilnadu

img

விளையாட்டு

ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 தங்கப் பதக்கம் இந்திய நட்சத்திரங்களுக்கு குவியும் பாராட்டு

16ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் -  வீராங்கனைகள் 99 பதக்கங்களை வென்று முதலிடத்துடன் வரலாறு படைத்து, நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். 99 பதக்கங்களில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கமும் அடங்கும். போட்டியை நடத்திய கஜகஸ்தான் 21 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் உள்பட 70 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், சீனா 15 தங்கம், 17 வெள்ளி, 5 வெண்கலம் என 37 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. மொத்தம் 14 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அதில் 8 நாடுகள் தங்கம் வென்றுள்ளன. இத்தகை சூழலில், ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர் - வீராங்கனைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜுவரேவிற்கு அதிர்ச்சி அளித்த பெலிக்ஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும்,  144ஆவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடுக்கட்ட த்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றா வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில்  3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனி யின் ஜுவரேவ், தரவரிசையில் 25ஆவது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் 4-6, 7-6 (9-7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 3:38 இதே பிரிவு மற்றொரு 3ஆவது சுற்று  ஆட்டத்தில் தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள உள்ளூர் வீரரான (அமெரிக்கா) டாமி பவுல், தரவரி சையில் 23ஆவது இடத்தில் உள்ள அலெக்ஸாண்டர் பப்ளிக்கை எதிர்கொ ண்டார். 3:38 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (7-5), 6-7 (4-7)  6-3, 6-7 (5-7), 6-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற பப்ளிக் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபனில் போராட்ட நாயகனாக அழைக்கப்பட்ட ஜெர்மனி வீரர் ஆல்ட்மையேர் காயம் காரண மாக அவரை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியாவின் டி மினார் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஆல்ட்மையேர் முதல் 2 சுற்றுகளில் 4 மணிநேரத்திற்கு மேலாக போராடி வெற்றி கண்டார் என்பது குறிப்பிட த்தக்கது. முன்னணி வீராங்கனைகள் வெற்றி மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரி சையில் முன்னணியில் உள்ள  வீராங்கனைகளான ஸ்வியாடெக் (போலந்து), அனீஸ்மோவா (அமெரிக் கா), அலெக்ஸாண்டாரோவா (அமெ ரிக்கா), ஹதாத் மாயா (பிரேசில் உள்ளிட்ட வீராங்கனைகள் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

புரோ கபடி லீக் : இன்றைய ஆட்டங்கள்

பாட்னா - உ.பி., நேரம் : இரவு 8 அணி

புனே - குஜராத் நேரம் : இரவு 9 அணி

 

இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா / சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)