states

img

ஜம்மு -காஷ்மீர் : 12 மணி நேரத்தில் பாலம் கட்டிய ராணுவம்

ஜம்மு -காஷ்மீர் : 12 மணி நேரத்தில் பாலம் கட்டிய ராணுவம்

கனமழையால் ஜம்மு -காஷ்மீர் உருக்குலைந்துள்ளது. ஜம்மு உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கனமழையால் இயல்பு நிலையை  இழந்து காணப்படுகின்றன. இந்நிலையில், ஜம்மு அருகே தாவி நதியின் குறுக்கே செல்லும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சேதமடைந்த  பாலத்தின் அருகே 110 மீட்டர் நீளமுடைய புதிய பாலத்தை இந்திய ராணுவ வீரர்கள் வெறும் 12 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளனர். தற்போது,  ராணுவத்தினர் கட்டிய பெய்லி பாலத்தின் வழியே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.