சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
ஜிஎஸ்டி விகிதங்களில் ஒன்றிய அரசால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் குறைப்பு மாநில நிதிநிலைக்கு கேடு விளைவிக்கிறது. 2017இல் 15.3% என அறிவிக்கப்பட்ட வருவாய் நடுநிலை விகிதம், தற்போது 9.8% ஆக சீர்கெட்டுள்ளது. வாங்கும் சக்தி மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக வருவாய் இழப்பு ஈடுசெய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு முற்றிலும் தவறானது.
குடியரசுத் துணை தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஒரு புதிய பிரச்சனை. ஒரு சிறப்பு திருத்தம் வரலாம், வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டும், இல்லாதவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால் இந்த தீவிரமான நீக்கம் ஏன்? ஜனநாயகம் என்பது வெறுமனே வாக்களிப்பதைக் குறிக்காது; பெரும்பான்மையாக இருப்பது எதை வேண்டுமானாலும் செய்ய அதிகாரம் அளிக்காது.
திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்தரா
அமித் ஷா அவர்களே! ஊடுருவல்காரர்கள் பற்றி அதிகம் பேசுகிறீர்கள். நீங்கள் 11 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்தும் இன்னும் ஊடுருவல்கள் இந்தியாவிற்குள் வந்தால், உள்துறை அமைச்சராக இருக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட்
தேர்தல் முடிவு வெளியான 45 நாட்களுக்குப் பிறகு, வாக்குச்சாவடிகளின் சிசிடிவி பதிவுகளை தேர்தல் ஆணையம் ஏன் நீக்க விரும்புகிறது? சிசிடிவி தான் நியாயமான தேர்தலுக்கு சாட்சியமாகும். அதைப் பாதுகாக்க வேண்டுமே தவிர நீக்கக் கூடாது.