tamilnadu

img

எள்ளுக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் மறியல்

எள்ளுக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் மறியல்

தருமபுரி, ஜூலை 16- பெண்ணாகரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற எள் ஏலத்தின் போது, விவசாயிகள் கொண்டு வந்த எள் ளிற்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததைக் கண்டித்து நூற்றுக் கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை  மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம், தாசம்பட்டி சாலையில் உள்ள  வேளாண்மை விற்பனை நிலையத் தில் முதல்முறையாக எள் கொள் முதல் செய்யப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் படி, புதனன்று காலை பென்னா கரம், தாசம்பட்டி, கூத்தபாடி, செங் கனூர், தின்னூர், மாங்கரை, மஞ்ச நாயக்கனஅள்ளி உள்ளிட்ட பகுதி களிலிருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர். விவ சாயிகளிடமிருந்து 193 லாட் (குவி யல்) கொண்டு வரப்பட்டு, உள்ளூர் வியாபாரிகளின் பரிசோதனைக்கு பிறகு வேளாண்மை விற்பனை நிலைய அதிகாரிகளால், ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிக பட்சம் ரூ.114 விலை நிர்ணயம் செய் யப்பட்டது. இந்நிலையில், எள்ளு கொள்முதலின் போது வெளியூர் வியாபாரிகளை கொண்டு வந்து விலையை நிர்ணயிக்காமல், உள் ளூர் பகுதியைச் சேர்ந்த தானிய மண்டி உரிமையாளரை அழைத்து, எள்ளுக்கு விலை நிர்ணயித்ததாக வும், இதனால் உரிய விலை  கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதா கக்கூறி 100க்கும் மேற்பட்ட விவசா யிகள் பென்னாகரம் அம்பேத்கர் சிலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பென் னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்த ரம், காவல் துணை கண்காணிப்பா ளர் சபாபதி, பென்னாகரம் வேளாண் உதவி இயக்குநர் இளங்கோவன், வேளாண் விற்பனை செயலாளர் அருள்மணி ஆகியோர்கள் அடங் கிய குழுவினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் திங்களன்று மீண் டும் ஏலம் நடத்தி, எள்ளுக்கு சரா சரியாக ரூ.95 நிர்ணயம் செய்து,  வெளியூர் வியாபாரிகளை கொண்டு வந்து கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்ற னர்.