திருப்பனந்தாள் ஒன்றியம் சேங்கனூர் ஊராட்சிக்கு பேருந்து சேவை
கும்பகோணம், ஜூலை 24- தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம், சேங்கனூர் ஊராட்சியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பணிக்கு செல்லும் மகளிர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலம் கும்பகோணம்-1 கிளை மூலம், கும்பகோணத்திலிருந்து ஆரலூர் வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை (தடம் எண்-A9) சேங்கனூர் திருமூவர் கோவில் வழியாக தட நீட்டிப்பு செய்து உயர்கல்விதுறை அமைச்சர் கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் ஆகியோர் சேங்கனூரில் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.