tamilnadu

img

புதுக்கோட்டையில் நூல்கள் வெளியீட்டு விழா அமைச்சர் மெய்யநாதன், திரைக் கலைஞர் ரோகிணி பங்கேற்பு

புதுக்கோட்டையில் நூல்கள் வெளியீட்டு விழா  அமைச்சர் மெய்யநாதன், திரைக்  கலைஞர் ரோகிணி பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜுலை 24 - கவிஞர் ஆர்.நீலா எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆலங்குடியை அடுத்த மங்களாபுரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். ‘அழகனும் அழகியும்’, ‘இஸங்களின் நாட்டியம்’ ஆகிய நூல்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், திரைக் கலைஞர் ரோகிணி ஆகியோர் வெளியிட்டு சிறப்புரையாற்றினர். நூல்கள் குறித்து புதுக்கோட்டை தமிழ் சங்கத் தலைவர் தங்கம்மூர்த்தி, தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம், செயலாளர் ஸ்டாலின் சரவணன், பொருளாளர் மு.கீதா, கே.என்.பி.முருகேசன், பறம்பு தமிழ் சங்கம் திருப்பதி வாசகன் உள்ளிட்டோர் பேசினர்.