tamilnadu

img

ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க நாகை மாவட்ட மாநாடு

ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து  ஓய்வூதியர்கள் சங்க நாகை மாவட்ட மாநாடு

நாகப்பட்டினம், ஜூலை 24-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு ஜூலை 22 அன்று நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாவட்டத் தலைவர் ஜி.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட இணைச் செயலாளர் என். பக்கிரிசாமி வரவேற்புரையாற்றினார். மாநிலத் தணிக்கையாளர் எஸ்.புஷ்பநாதன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.மனோகரன் வேலை அறிக்கையையும், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பட்டாபிராமன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சு.சிவகுமார், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் எல்.நக்கீரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் ப. அந்துவன்சேரல், முன்னாள் மாவட்டச் செயலாளர் அ.தி. அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்டத் தலைவராக ஜி.கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்களாக எஸ்.பட்டாபிராமன், பி.சார்லஸ் எட்வின், ஜி.சண்முகம், மாவட்டச் செயலாளராக பி.மனோகரன், மாவட்ட இணைச் செயலாளர்களாக என்.பக்கிரிசாமி, கொளப்பாடு வி.செல்வராஜ், பி. வீராச்சாமி, பொருளாளராக சி. குமரன், மாநில செயற்குழு உறுப்பினராக வி.மாரிமுத்து மற்றும் மாவட்ட தணிக்கையாளராக ஆர். முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  70 வயது நிறைவு செய்துள்ள ஓய்வூதியர்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊராட்சி எழுத்தர் பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் வி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து நன்றி கூறினார்.