tamilnadu

img

ஆணழகன் போட்டியில் வென்ற அரசுக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

ஆணழகன் போட்டியில் வென்ற  அரசுக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

அறந்தாங்கி, ஜூலை 23 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலை அடுத்த பெருநாவலூர் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் மா.சுஜீகரன் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.  இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் (ஐஎப்எப்) சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி அண்மையில் அரியலூரில் நடைபெற்றது. இதில் 55 கிலோ எடை பிரிவில் சீனியர்களுக்கான போட்டியில் 38 வீரர்கள் பங்கேற்றனர்.  போட்டியின் நிறைவில் சிறந்த முதல் ஆறு இடங்களில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மா.சுஜீகரன் முதலிடம் வென்றார். அவருக்கு வெள்ளிப் பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதன்மூலம் தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார். இவரை அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மா.துரை பாராட்டினார். அவருடன் கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம். நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் மு.அன்பழகன், கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் நாராயணசாமி உடனிருந்தனர்.