tamilnadu

img

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக!

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக! அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு  ஐக்கிய விவசாயிகள் முன்னணி வலியுறுத்தல்

புதுதில்லி இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத் திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களையும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கே எம்) வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக வியாழனன்று தில்லி யில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப் பின் போது எஸ்கேஎம் தலைவர்கள் அளித்த பேட்டியில்,“அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் ‘தேச விரோத ஒப்பந்தம்’ ஆகும். எனவே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று ஒன்றிய அரசை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். மாநில சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டி, இந்தியா-அமெரிக்கா இடையிலான தேச விரோத வர்த்தக ஒப்பந்தத்தில் ஒன்றிய  அரசு கையெழுத்திடுவதைத் தவிர்க்கக் கோரி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை யுடன் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களிடம் மனு அளிக்க உள்ளோம்” என கூறினர். இந்திய விவசாயம் அழியும் மேலும் மாநில அரசுகளுக்கு எஸ்கேஎம் தலைவர்கள் விடுத்த கோரிக்கையில், “அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலமாக விவசாயிகளின் நலன்க ளுக்குத் துரோகம் இழைத்த ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமெ ரிக்காவிலிருந்து சோயாபீன் எண்ணெய், ஆப்பிள், பருத்தி, பால் பொருட்கள் மற்றும்  கால்நடைத் தீவனங்கள் மீதான வரி குறைக் கப்படுவதால் இந்திய விவசாயம் அழியும். அதனால் இந்த அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம்” என்று ஒன்றிய அரசுக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் மூலமாக அழுத்தம் கொடுக்க மாநில முதலமைச்சர்களை எஸ்கேஎம் கேட்டுக்கொள்கிறது. ஜிஎஸ்டி அதே போல,“மாநிலங்களின் வரி விதிப்பு அதிகாரத்தை மீட்டெடுக்க 2017ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் வரிக் குவி யலில் மாநிலங்களுக்கான பங்கை தற்போ தைய 31 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதுதொடர்பாகவும் அனைத்து மாநில சட்டமன்றத்திலும் ஒன்றிய அரசுக்கு எதிராக சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்” என தலைவர்கள் கூறினர். விவசாயம் மற்றும் இதர சட்டங்கள் இறுதியாக,“அனைத்து விளைபொ ருள்களுக்கும் சி2+50% (உற்பத்திச் செலவு + 50% லாபம்) என்ற அடிப்படை யில் குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும். விவசாயி களின் தற்கொலைகளைத் தடுக்க அனை த்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், விபி ஜிராம்ஜி சட்டம்,  தேசிய விதையியல் மசோதா, மின்சாரத் திருத்தச் சட்டம் 2025 உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என எஸ்கேஎம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும்,“பிப்ரவரி 27  முதல் மார்ச் 8 வரை அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து  மனு அளிக்க வேண்டும். மார்ச் 9 நாடாளு மன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடு தழுவிய அளவில் கிராமப்புறக் கூட்டங்களை நடத்த வேண்டும்” என மாநில மற்றும் தேசிய விவசாயத் தலைவர்களை எஸ்கேஎம் வலியுறுத்தியுள்ளது.