states

img

ந்தனையிலேயே பிரச்சனை - பி.வி.நாகரத்தினா.

ந்தனையிலேயே பிரச்சனை

பேசுவதற்கு முன்பு வருவது சிந்தனை. எப்படி நாம் சிந்திப்பதைத் தடுப்பது? அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பேசுவதைத் தூண்டும் சிந்தனைகளைத் துடைத்தெறிய வேண்டும். 

அனிமேஷனில் அதிகரிக்கும் ஆர்வம்

ஜப்பானிய அனிமேஷன் படங்கள் இந்தியப் பதின்பருவத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வயதினரில் 75 விழுக்காட்டினர் மிகவும் ரசிக்கிறார்கள். பொழுதுபோக்குக்காகப் பார்ப்பவர்களில் 62 விழுக்காட்டினர் அனிமேஷன் படங்களை விரும்புகிறார்கள் என்று 2025 இல் தேசிய ஆய்வுக் குழு மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.  கணினி மென்பொருட்கள் மூலமாக புள்ளிகளை வைத்து உடல்களை வரைந்து அனிமேஷன் படங்களை உருவாக்குகிறார்கள். ஜப்பானில் இந்தப்படங்கள் சக்கைப் போடு போடுகின்றன. தங்கள் உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி, ரசிகர்களை இழுக்க முயற்சிக்கிறார்கள். அதில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. டுவென்ட்டி20 சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நேரத்தில் பரபரப்பாக ஒரு விளம்பரம் ஒடிக் கொண்டிருக்கிறது. அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகிறது. அந்தப் பாகத்தில் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் சுப்மன் கில், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்கிறார்கள். படங்களை வெளியிடும் தளமான கிரன்ச்சிரோல் இதைத் தயாரித்துள்ளது.  ஏன் ராஷ்மிகா.. என்ற கேள்விக்கு, அனிமேஷன் படங்களுக்கு அவர் மிகப்பெரிய ரசிகை என்று நிறுவனம் தெரிவிக்கிறது. ஆமாம்.. என்று ராஷ்மிகாவும் பலமாகத் தலையாட்டுகிறார்.

முன்னணிக்கு வரும் இடதுசாரிகள்

அமெரிக்காவில் பெர்னி சாண்டர்சின் இடதுசாரிக் குரல் மட்டும் தனித்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆனால் அண்மைக்காலங்களில் நிறைய இடதுசாரிகள் கவனத்தை ஈர்க்கிறார்கள். நியூயார்க் மேயராக ஜோரன் மம்தானி வெற்றி பெற்றதில் இருந்து ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் சோசலிஸ்டுகள் உரக்கப் பேசுகின்றனர். நியூயார்க்கின் 7 ஆவது மாவட்டத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு யார் செல்வது என்ற போட்டி தொடங்கியிருக்கிறது. ஜனநாயகக்கட்சியில் இருந்து யார் களமிறங்குவது என்பதில் கட்சியின் இரண்டு இடதுசாரிகளுக்கிடையில் போட்டி உள்ளது. கட்சி யாரைத் தேர்வு செய்யும் என்பது ஒருபுறமிருக்க, தேர்வு செய்யப்படுபவர் மட்டுமே களத்தில் இருக்க வேண்டும் என்கிறார்கள் வலதுசாரி எதிர்ப்பாளர்கள்.  மம்தானியின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனநாயக சோசலிஸ்ட் கிளாய்ர் வால்டெஸ் முந்துகிறார்.

நிறவெறிக் கூச்சலை மீறி..

பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்டக்காரர் வினிசியஸ் ஜூனியர், ஸ்பெயின் லீக்கில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். அவர் கால்களுக்கு பந்தை அனுப்பிவிட்டு, மற்ற ஆட்டக்காரர்கள் எதிர் அணியில் கோல் பகுதிக்குச் சென்று விடுவார்கள். எத்தனை பேர் எதிர்பட்டாலும், பந்தைக் கோல் பகுதி வரையில் அவர் கொண்டு சென்று விடுவார். இவரிடம் பந்து விட்டால் போதும், ரியர் மாட்ரிட் ரசிகர்கள் ஆனந்தக் கூச்சலிடுவார்கள். எதிர் அணியின் ரசிகர்களோ, இவரது நிறம் குறித்து சகட்டு மேனிக்கு வார்த்தைகளை வீசுகிறார்கள். இப்போதல்ல, கடந்த ஆறு ஆண்டுகளாகவே அவர் இதை எதிர்கொள்கிறார். நம்மைத் திசைதிருப்பவே எதிர் அணி ரசிகர்கள் இதைச் செய்கிறார்கள் என்று அணியின் சக ஆட்டக்காரர்கள் வினிசியஸ் பக்கம நிற்கின்றனர். அவரும் நிறவெறிக் கூச்சல்களை மீறி ஆட்டங்களில் அசத்துகிறார்.