கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணிக்காக 100க்கும் மேற்பட்ட சுவரோவியங்களை வரைந்த பெண்
திருவனந்தபுரம் கேரளத்தில் தேர்தல் என்றால் அதில் முக்கிய மான அங்கமாக இருப் பது சுவரோவியங்கள் தான். தற்போதைய பிளக்ஸ் போர்டு மற்றும் கட் அவுட் கலாச்சாரம் உள்ள காலத்திலும் சுவரோவியக் கலை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது கேரளத்தில். இதற்குக் காரணம் சுவரோவியக் கலையை ஒரு பாரம்பரியமாகக் கடைப் பிடிப்பது ஆகும். இந்த சுவரோவியப் பணியில் பொதுவாக ஆண்கள் மட்டுமே ஈடு பட்டு வந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி பெண்களும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் முழக்கங்க ளைச் சுவர்களில் எழுதி பிரமிக்க வைத்து வருகின்றனர். சிபிஎம் இதில் மிக முக்கியமானவர் ஜிஷி மோள் ஜே.ஆர் ஆவார். திரு வனந்தபுரம் விளவூர்க்கல் பஞ்சா யத்தைச் சேர்ந்த இவர் நுண்கலை யில் (Fine Arts) டிப்ளமோ முடித்த ஓவிய ஆசிரியர். தனது ‘சின்னுஸ் ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ்’ அகாடமியில் ஓவியம் கற்பிப்ப தோடு, தேர்தல் நேரங்களில் சுவரோ வியக் கலைஞராகவும் மாறுகி றார். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மட்டும் இடது ஜன நாயக முன்னணிக்காக (எல்டிஎப்) சுமார் 100க்கும் மேற்பட்ட சுவ ரோவியங்களை வரைந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஜிஷி மோள் குடும்பஸ்ரீ அமைப்பின் துணைக் குழு உறுப்பினர் ஆவார். இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், “கடுமையான கோடை வெப்பத்தை யும் பொருட்படுத்தாமல் நான் இதைச்செய்கிறேன். தொழில் நுட்பம் வளர்ந்தாலும், கலை தங்கள் படைப்பாற்றல் மூலம் கொடுக்கும் அந்தச் சிறப்புத் தொடுதல் தனித் துவமானது. பிளக்ஸ் போர்டுகளின் வரவால் பாரம்பரிய சுவரோவியக் கலை நலிவடைந்து வரு கிறது. அதனால் தான் சுவரோவி யக் கலை வாய்ப்புகள் வழங்கி உத வுகிறேன்” என அவர் கூறினார். ஜிஷி மோள் 2019 மற்றும் 2026 ஆம் ஆண்டு ‘கேரளோத்சவம்’ விழாவில் கலாத்திலகம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
