articles

img

ஒரு வர்க்கப் பாடம்! வாச்சாத்தி ஆவணப்படம் - கே.கனகராஜ்

ஒரு வர்க்கப் பாடம்! வாச்சாத்தி ஆவணப்படம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு 1985இல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முதலாக எனக்கு வாசிக்க கொடுக்கப்பட்ட நூல் கம்யூனிஸ்ட் அறிக்கை. அந்த அறிக்கையின் முதல் வாக்கியம் “ஏடறிந்த வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்று இருக்கும். வாசிப்பதற்கு உத்வேகம் அளித்தாலும் அந்த வாக்கியம் பற்றி புரிந்துகொள்வதற்கு நீண்ட காலம் எடுத்தது. 14.2.2026 அன்று வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடப்பட்டது. காம்ரேட் டாக்கீஸ் (Comrade Talkies) குழுவினர் அதை உருவாக்கி இருந்தார்கள். இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கலைஞர், மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமிகு கமல்ஹாசன் அவர்களும், வாச்சாத்தி போராளிகளும், சில பத்திரிகையாளர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மட்டுமே கலந்துகொண்ட கூட்டம் அது. 

ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகள்

40 நிமிடத்திற்குள் அடைக்கப்பட்ட செறிவுமிக்க 30 ஆண்டுகால போராட்ட வரலாறு அது. காவல்துறை, வனத்  துறை, நிர்வாக அமைப்புகள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின்  அடக்குமுறை கருவிகள் என்று கம்யூனிஸ்ட் இலக்கி யங்கள் வரையறுத்திருக்கும். உண்மையில் இந்த ஆவ ணப்படம் அந்த வார்த்தைகளால் அதை வரையறுக்க வில்லை. ஆனால் வரலாற்றுத் தொகுப்பு, பளிச்சென்று  இவையெல்லாம் அடக்குமுறைக் கருவிகள்தான் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. சந்தன மரம்  திருட்டு போகிறது. திருடியவர்கள் அன்றைக்கு பிரபல மாகப் பேசப்பட்ட வீரப்பன் கூட்டத்தினர் கிடையாது. ஆளும் அரசின் அங்கமாக இருந்தவர்கள்தான்.  ஒரு திருட்டை மறைப்பதற்காக வாச்சாத்தி கிராமத்தின்  மக்கள் சந்தன மரங்களை வெட்டி, மறைத்து வைத்தி ருப்பதாக அரசு அமைப்புகள் அந்த கிராமத்தை வேட்டை யாடுகின்றன. உளவுத்துறை, காவல்துறை, வரு வாய்த்துறை, வனத்துறை இவர்கள் யாருக்கும் தெரியா மல் அதை அந்த கிராம மக்கள் வெட்டி கடத்தி மறைத்து  வைத்திருக்க முடியாது. ஆனாலும் அந்த வேட்டை நடந்தது. அத்தனை வீடுகளும் பாதிக்கப்பட்டன. 18 பெண்  கள் தன் உறவினர்களின் கண்முன்பாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டன. ஆடு மாடு, கோழி களை அறுத்து சமைத்துத் தின்றார்கள். மீதமிருந்ததை அள்ளிச் சென்று விற்றுவிட்டார்கள். நீர்நிலைகளில் கழிவு களையும் ஆயில் என்ஜினையும் கொட்டி, குடிப்ப தற்கும் இதரப் பயன்பாட்டிற்கும் லாயக்கற்றதாக மாற்றி னார்கள். கையில் அகப்பட்டவர்களை எல்லாம் அள்ளிச்  சென்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னே பூட்டி வைத்  தார்கள். இத்தனையும் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.

பொய் வழக்கு, போராட்டம்:  தண்டனை, இழப்பீடு!

அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்தார்கள். ஐஏஎஸ்  அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி என எல்லோரும் இதை ஏனென்று கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் புகார் மனுவைக் கூட வாங்கிப்  பார்க்கத் தயாராக இல்லை. அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கம் போராடு கிறது. 3.5 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுத் தருகிறது.  குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரும், இறந்தவர்கள் உள்பட அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்ப ளிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் பெற்றுத் தரப்படுகிறது. இந்த ஆவணப்படம் இவை எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறது.  இதில் முக்கியமான விசயம் எந்த நேரடிப் பகையும் இல்லாத காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஏன் இப்படி எதிரிநாட்டு மக்களிடம் கூட காட்டக்கூடாத குரூரத்தை வெளிப்படுத்தியது? பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா பெண்தான். அவர் இரக்கம் காட்டினார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்  களுக்கோ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்  பட்ட பெண்களுக்கோ அல்ல. மாறாக காமவேட்டையும்,  நரவேட்டையும் நடத்திய அரசு அதிகாரிகளுக்கும், சந்தன மரவேட்டைக்கார்களுக்கு ஆதரவாக இருந்த வர்களுக்கும் அவர் பக்கபலமாக நின்றார்.

பெண் முதலமைச்சர், பெண் நீதிபதி

பேய் கூட இறங்கும் பெண்களுக்காக, பெண் முதல மைச்சர் ஏன் இறங்கவில்லை என்ற கேள்வி முக்கிய மானது. இதேபோன்று தமிழ்நாட்டின் முதல் அரசு  பெண் வழக்கறிஞர் பத்மினி சேசுதுரை அவர்தான் இந்த வழக்கை முதலில் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி.  அவர்தான் தமிழகத்தின் முதல் உயர்நீதிமன்ற பெண்நீதி பதியும் ஆவார். அவரும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்கூட  அல்ல நியாயத்தின் பக்கம் கூட நிற்கவில்லை. இதற்கு பெயர் என்ன? பெண்ணோ, முதல் பெண்ணோ ஏழை  பாழைகள் வீட்டிலிருந்து வந்த வனத்துறை, காவல்துறை,  வருவாய்த்துறை அதிகாரிகளோ ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்? இங்குதான் ஒருவரின் வர்க்கநிலைபாடு வந்து நிற்கிறது. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள்தான் அவர்களை ஆட்டுவிக்கிறது.  இன்னொருபக்கம் அந்த கிராமத்திற்கு சம்பந்த மில்லாத கம்யூனிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்க மும் இதை கையில் எடுக்கின்றன. 30 ஆண்டு காலம் ஒரு தவம் போல இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன. ஒரு பாலியல் சீண்டல் நடந்தாலே வெளியில் சொல்ல  தயங்குகிற, மறைக்கிற காலமிது. ஆனாலும் அந்தப்  பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட  பிறகும் ”எங்களுக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது” என்று களத்திற்கு வந்தார்கள். அதை கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு பயிற்றுவித்தது. பாதிக் கப்பட்டவர்கள் என்பதில் இருந்து போராளிகளாக முன்னேறினார்கள்.

நேரடிப் பாதையும் இல்லை...  நேரடி உறவும் இல்லை!

வீடு இழந்து உணவிழந்து, வைத்திருந்த சொத்துக்  களை எல்லாம் இழந்து மலைப்பகுதியில் மறைந்திருந்த அந்த மக்களுக்கு தெம்பூட்டி ஊருக்குள் அழைத்து வந்  தால் உண்ண உணவுப் பொருளும் சமைக்கப் பாத்திரங்க ளும் கிடையாது. நீர் பருக குவளை கிடையாது.

இவையெல்லாம் சிஐடியூ அவர்களுக்கு கொடுக்கிறது. சிஐடியூ விற்கு பணம் அச்சடிக்கிற அதிகாரம் ஏதுமில்லை. முதலாளித்துவ  கட்சிகளாலும், அந்தக் கருத்துக்கு இரையான சாதாரண மனிதர்  களாலும் உண்டியல் குலுக்கிகள் என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட  தொழிலாளிகள் அதிலும் குறிப்பாக சிஐடியூ உடன் இணைக்  கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒருநாள் முழுவதும்  பேருந்து நிலைய வாசல்களில் நின்று உண்டியல் ஏந்தினார்கள். 1 ரூபாய் முதல் அவர்கள் உண்டியலில் கிடைத்த எல்லாவற்றை யும் சேர்த்து குடம், சாப்பாட்டுத் தட்டு, சமையல் பாத்திரம், குடி நீர் குவளைகள் வாங்கி அந்த மக்களுக்குக் கொடுத்தார்கள்.  எப்படி ஜெயலிதாவுக்கும், பத்மினி சேசுதுரைக்கும், வனத்துறை யினர் வருவாய்த்துறையினர் காவல்துறையினருக்கும், அந்த  மக்களுக்கும் இடையே நேரடிப் பகை இல்லையோ அதே போன்று இந்தத் தொழிலாளர்களுக்கும், அந்த மக்களும் நேரடி  உறவு இல்லை. வர்க்கப் பாசம் ஒரு பகுதி அடக்குமுறையை ஆதரித்ததற்கும் இன்னொரு  பகுதி அடக்குமுறையை எதிர்த்து நியாயத்தின் பக்கம் 30 ஆண்டுகள் விடாமல் போராடியதற்கும் ஒரே காரணம்தான்  அவரவர் வர்க்க நிலைப்பாடுகள். மார்க்ஸ் இந்தப்போராட்டங்களி லும், இதன் அனுபவங்களிலும் உயிர்ப்போடு வலம் வருகிறார். வர்க்கப் போராட்டங்களே வாழ்க்கையை போராட்டங்கள் தேவைப்படாத வளமான வாழ்வாக மாற்றும் என்பதை அனு பவங்களின் மூலம் உணரச் செய்திருக்கிறார். 40 நிமிடத்தில் 30 ஆண்டு வரலாறு 40 நிமிடத்தில் 30 ஆண்டுகால போராட்டத்தை அதன் வலியை  அரசு நிர்வாகம் ஆளும் வர்க்கத்தின் அடியாள் என்கிற உண்மை யை, அன்றாடக் கூலிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது சாப்பாட்டின் ஒருபகுதியை குறைத்துக்கொண்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்ததை உண்மைகளை மட்டும் சொல்வ தன் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள் காம்ரேட் டாக்கீஸ் தோழர்கள். படம் மட்டுமல்ல, பாடமும் கூட அனைவருக்கும் நமது பாராட்டுகள். எழுத்து, இயக்கம்,  கேமரா, இசை அதற்கு ஆவணங்களைப் பயன்படுத்துவது, எடிட்டிங் என்று ஒவ்வொரு துறையிலிருந்து தோழர்களும் உணர்வுப் பூர்வமாக அந்த மக்களின் வலிகளோடும் துயரங்க ளோடும் வெற்றிகளோடும் தொடர்ந்து பயணித்திருக்கிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு நமது வாழ்த்துகள். நன்றி. வர்க்க சமூகம் இருக்கும் வரைக்கும் ஒடுக்குமுறைகளும் நீடிக்கும். ஒடுக்குமுறை கருவிகளும் சார்புத்தன்மையோடுதான் செயல்படும். மார்க்ஸ் சொன்னதுபோல இழப்பதற்கு ஏதுமற்ற மக்கள் தங்கள் பொன்னுலகை நோக்கி பயணப்படுவதற்கு ஒற்றுமை என்கிற ஆயுதமும், ஒளிதரும் தத்துவமும் அதனால் உந்தித் தள்ளப்பட்ட மக்களும் தொடர்ந்துகொண்டே இருப்பார்  கள். வாச்சாத்தி, ஆவணப்படம் மட்டுமல்ல ஒரு வர்க்கப் பாட மும்கூட.  - கே.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)