குரலற்றவர்களின் குரல் சிபிஐ (எம்) புதுச்சேரி தேர்தல் அறிக்கை - எஸ்.ராமச்சந்திரன்
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்த லுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஐந்தாண்டு கால பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும், புதுச் சேரியின் எதிர்காலத்திற்கான மாற்றுத் திட்டங்களை முன் மொழிந்தும் விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சோதனைக்களமாகும் புதுச்சேரி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசின் அபாயகரமான கொள்கைகளைச் சோதித்துப் பார்க்கும் களமாகப் புதுச்சேரியை மாற்றியுள்ளனர்.
இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாகப் புதுச்சேரியை மாற்றும் சதி அரங்கேறியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொடர் போராட்டத்தால் கடைகள் திறக்கப்பட்டா லும், கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ஒன்றிய அமைச்சர் “டிஜிட்டல் காயின்” என்ற பெயரில் மீண்டும் ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்தும் அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக் கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லாபம் தரக் கூடிய புதுவை மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கின்றனர். இதற்கு முன்னோட்டமாக ‘ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்துவது போன்ற நவீனக் கொள்ளைகள் மக்கள் மீது திணிக்கப்படு கின்றன.
மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான ‘வக்பு திருத்தச் சட்டம்’ பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்கூட அமலாகாத நிலையில், புதுச்சேரியில் மட்டும் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டு, இந்துத்துவா சார்புள் ளவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது இஸ்லாமியப் பொதுச் சொத்துகளுக்கு ஏற் பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். அதிகாரமில்லாத ‘பொம்மை’ முதல்வர் மாநில அந்தஸ்து குறித்துத் தொடர்ச்சியாகத் தீர்மா னங்கள் நிறைவேற்றினாலும், ஒன்றிய பா.ஜ.க அரசு அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. புதுச்சேரியை வெறும் யூனியன் பிரதேசமாகவே வைத்திருக்க அவர் கள் விரும்புகிறார்கள்.
முதல்வர் ரங்கசாமி மாநில அந் தஸ்து கோருவதாக நாடகமாடுகிறார். ஆனால், உண் மையில் ஒரு அதிகாரியை மாற்றுவதற்கான அதிகாரம் கூட அவருக்குக் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்குச் சமமாக நியமன எம்.எல்.ஏக்க ளைத் தங்களுக்குச் சாதகமாக பா.ஜ.க பயன்படுத்து கிறது. உட்கட்சிப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் இந்த நியமனப் பதவிகள் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன.
உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் உள்ளாட் சித் தேர்தலை நடத்தாமல் ஜனநாயக அரசியலை விழுங்கும் ஆக்டோபஸாக பா.ஜ.க திகழ்கிறது. எனவே, “முழுமை யான மாநில அந்தஸ்து” என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் முதன்மையாக வலியுறுத்துகிறது. முடங்கிய வாக்குறுதிகள் - பெருகும் ஊழல் கடந்த தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற அரசு தயாராக இல்லை. நடமாடும் ரேஷன் கடைகள், பஞ்சாலைகள் திறப்பு, ஊழியர்கள் பணி நிரந்தரம், குப்பை வரி ரத்து, பெண்களுக்கு இலவசப் பேருந்து, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி, ‘செண்டாக்’ கல்வி உதவித்தொகை போன்ற அறி விப்புகள் அனைத்தும் வெறும் காகிதத்தோடு நின்று விட்டன. தீவிரமாகும் வேலையின்மை, பெருகும் மது வணிகம், முடங்கிய தொழில்துறை என ஒட்டுமொத்த புதுச்சேரியும் பொருளாதாரச் சிக்கலில் தவிக்கிறது. மறுபுறம் ஊழல் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டது.
மதுபான உரிமம் வழங்குவதில் பல கோடி ஊழல், பல ஆயிரம் கோடி மதிப்பிலான போலி மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை ஊழல் எனப் புகார்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபடுகின்றனர். ஊழலில் கைது செய்யப்பட்ட 26 பேர் ஜாமீனில் வெளி வரும்போது, புகாரைப் பதிவு செய்த மருந்துக் கட்டுப் பாட்டுத் துறையே வழக்கை வாபஸ் வாங்குகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ வழக்கு களை மிகவும் தாமதமாகப் பதிவு செய்து குற்றவாளி களைப் பாதுகாக்கிறது.
16-ஆவது நிதிக்குழுவிலும் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பொருளாதாரத் திட்டங்கள் இந்த பின்னணியில், விமர்சனங்களோடு நிற்கா மல், புதுச்சேரியின் நிதி ஆதாரத்தைப் பெருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்வரும் ஆலோசனைகளை தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது: G வேளாண் முன்னேற்றம்: விவசாயம், கால்நடை, பால் உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு முன்னுரிமை அளித்தல். பஞ்சாலை மற்றும் சர்க்கரை ஆலைகளு க்குத் தேவையான கரும்பு, பருத்தி உற்பத்தியை ஊக்குவித்தல். உணவுப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான நெல் மற்றும் சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல். G நிதி மேலாண்மை: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதி காரிகளின் சொத்துகளைக் கண்காணித்து விசார ணைக்கு உட்படுத்துதல்.
மின்சாரம், போக்குவரத்துத் துறைகளில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தொகையை வசூலித்தல். Gவருவாய் பெருக்குதல்: அந்நிய மதுபான உற்பத்தியை அரசே நேரடியாகக் கொள்முதல் (FL1) செய்து சில்லரை வணிகத்திற்கு வழங்குவது. அரசு கேபிள் டிவி நிறு வனத்தைத் தொடங்கி, தனியார் விளம்பரங்கள் மற்றும் குறைந்த கட்டணச் சேவை மூலம் வருவாய் ஈட்டுவது. G வேலைவாய்ப்பு: அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப ‘பணி நியமன வாரியம்’ (Recruitment Board) அமைத்தல். 2007-இல் புதுச்சேரி பொதுக்கணக்கு தொ டங்கியபோது நிலுவையில் இருந்த ரூ. 2,177 கோடி கடனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துதல்.
குரலற்றவர்களின் குரல் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கா கச் சில அதிரடித் திட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை முன்மொழிகிறது: G வாடகை மானியம்: சொந்த வீடில்லாத ஏழைக ளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் வரை, மாதம் ரூ. 4,000 வாடகை மானியம் வழங்குதல். ஆதிதிராவிடர் மற்றும் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்திய நிலங்களை 80:20 என்ற விகிதத்தில் தகுதியான மக்களுக்கு வழங்குதல். இலவச மனைப் பட்டா அளவை 800 சதுர அடியாக நிர்ணயம் செய்தல். G சுங்கச்சாவடி அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை விதிக ளுக்கு மாறாக சேலியமேடு மற்றும் மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை (Toll Plaza) அகற்றிட மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் போ ராடும். இது நடுத்தர மக்கள் மற்றும் வாகன ஓட்டிக ளின் மீதான வரிச் சுரண்டலைத் தடுக்கும். G இளைஞர் நலம்: வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித்தொகை வழங்க வலியுறுத்து தல்.
100 நாள் வேலைத் திட்டத்தைச் (MGNREGA) சீர் குலைக்கும் ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்து முழுமையாகச் செயல்படுத்துதல். கடல் சார்ந்த சுற்றுலாத் திட்டங்களில் மீனவ இளைஞர்க ளுக்கு முன்னுரிமை அளித்தல்.
G பாலினச் சமத்துவம் & சமூக நீதி: நிர்வாக அமைப்பு களில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித் தல். POSH சட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களுக்குத் தீர்வுகாண தனி நீதிமன்றம் அமைத்தல். திரு நர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குதல். மாற்றத்திற்கான தொடக்கம் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளி யிட்டுள்ளது. மது மற்றும் போதைப்பழக்கத்தை ஒழித்து, பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கவும், ஆதரவற்ற முதியோர்களுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவி வழங்கவும் இந்த அறிக்கை வழிவகை செய்கி றது.
ஊழலுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் மக்கள் நலனைப் பேசவும் இடதுசாரி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில், லாஸ்பேட்டை தொகுதியில் ஆர். ராஜாங்கம், திருபுவனை தொகுதியில் மா. தட்சிணா மூர்த்தி (சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்), உழவர் கரை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் நாரா. கலைநாதன் (கதிர் அரிவாள்), மாஹி தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு சுயேச்சை வேட்பாளர் அசோக் குமார் (தொலைக்காட்சிப் பெட்டி) ஆகியோருக்கு வாக்களித்து, ஏப்ரல் 9 அன்று நடைபெ றும் தேர்தலில் மாற்றத்திற்கான தொடக்கத்தை உரு வாக்குவோம்.
