தமிழ்நாடு பாதுகாக்கப்பட பாஜக அணி தோற்கடிக்கப்பட வேண்டும்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந் துள்ளது. தேர்தல் பரப்புரை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவைத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆளப் போவது யார் என்கிற கேள்வி மட்டுமல்ல, தமிழ்நாடு என்கிற மாநில கட்ட மைப்பு நீடிக்குமா? என்கிற கேள்வி யும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு பாது காக்கப்பட வேண்டுமானால், பாஜக வும் அதனோடு கூட்டுச் சேர்ந்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் வேரோ டும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப் பட வேண்டியது அவசியமாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தலைமை என ஒப்புக்கு கூறப்பட்டாலும், உண்மையில் அந்த கூட்டணியை வழிநடத்துவதும் தலைமை தாங்குவதும் பாஜக பரிவாரம்தான்.
பாஜகவின் படையெடுப்பு என்டிஏ தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டு மின்றி, புல்டோசர் புகழ் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட 6 மாநில முதல்வர்கள் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வருகிறார்கள். மதுரை தெற்குத் தொகுதியில் பாஜக வேட்பாளரின் வேட்பு மனுத் தாக்கலுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வருகிறார்.
இதிலிருந்தே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக அளிக்கும் முக்கியத் துவத்தை புரிந்து கொள்ள முடியும். கனவிலும்கூட தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் தீங்கு செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள் பாஜகவினர். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என அனைத்தி லும் ஒற்றைத் தன்மையை புகுத்த துடிப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரத்தினர். ‘சிந்தையில் கள்விரும்பி சிவசிவ’ என்பது போல் தமிழ்நாட்டிற்கு வரும் போது மட்டும், தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்கள் போல பாஜகவினர் பகல் வேஷம் போடுவார்கள். ஆனால் உண்மையில், சமஸ்கிருத மற்றும் இந்தி மொழி திணிப்பில் மட்டுமே அவர்கள் மூர்க்கம் காட்டி வருகிறார்கள். இந்தித் திணிப்பே அவர்கள் திட்டம் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர மறுப்பதால், தமிழ்நாட்டில் பள்ளிப் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2401 கோடி நிதியை இன்று வரை தர மறுக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டிற்குள்ளேயே ஓடும் ரயில்களுக்குகூட தமிழில் பெயர் வைக்க மாட்டார்கள்.
மாறாக, திருச்சி ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் கடமை நுழைவாயில் என்பதை ‘கர்த்வய த்வார்’ என்று இந்தியை தமிழில் எழுதிவிட்டார்கள். எதிர்ப்பு எழுந்தவுடன் பின்வாங்கினார்கள். பல்வேறு ஊர்களின் பெயர்ப் பலகை களை இந்தி மொழியிலும் எழுதி வைத்துள்ளனர். இந்தித் திணிப்பு ஒன்றே பாஜகவினரின் கடமை என்பதே இது உணர்த்துகிறது. அதிமுகவை முன்னிறுத்தி பாஜக தொடுக்கும் மொழித் திணிப்பு படையெடுப்பு வெற்றி பெறுமானால், தமிழ்நாடு முழுவதும் தமிழை தள்ளி வைப்பார்கள்.
மாநில உரிமைகளுக்கு கொள்ளி வைப்பார்கள். மீண்டும் குலக்கல்வி முறையா? தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வியை ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிற, கார்ப்பரேட் மயமாக்குகிற, மதவெறிமயமாக்குகிற வேலையில் ஒன்றிய மோடி அரசு இறங்கியுள்ளது. அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் மாற்றாக, புராணப் புரட்டுகளையும் வரலாற்றுத் திருத்தங்களையும் மூட நம்பிக்கைகளையும் பாடத்திட்ட மாக மாற்றுவது மட்டுமின்றி தமிழ் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட குலக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வரத் துடிக்கிறது ஒன்றியஅரசு. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்று மை யான்’ என்பது குறள் நெறி. ஆனால், வங்கிக் கடன் தருவதற்கு கூட குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்று விஸ்வகர்ம யோஜனா திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு.
இவர்களது புதிய கல்விக் கொள்கையிலும்கூட தொழில் கல்வி என்ற பெயரில் குலத் தொழிலையே புகுத்துகின்றனர். விடுதலை பெற்ற இந்தியாவில் மொழிவழியிலேயே மாநிலங்கள் அமைய வேண்டுமென முதல் குரல் எழுப்பியது பொதுவுடமை இயக்கம். அதன்படியே அன்றைய பெரும்பா லான மாநிலங்கள் மொழிவழியில் அமைக்கப்பட்டன. ஆனால், மாநி லங்கள் என்கிற கட்டமைப்பையே பாஜகவின் தாய் அமைப்புகளான ஆர்எஸ்எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் ஏற்கவில்லை.
மாறாக, அதிகாரம் முழுவதும் தில்லி யிலேயே குவிக்கப்பட்டிருக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக மட்டுமே மாகாணங்கள் இருக்க வேண்டும் என்றார்கள். ஜனபாத நிர்வா கம் என்று அவர்கள் அதற்கு பெயரிட் டார்கள். ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை பாஜக கைப்பற்றிய பிறகு, மொழி வழி மாநிலங்களை கொஞ்சம் கொஞ்ச மாகச் சிதைத்து வருகிறது. தமிழ்நாடு என்று அழைக்கக் கூடாது என முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது தற்செயலான ஒன்றல்ல. தமிழின் பெயரால் ஒரு மாநிலம் இருப்பதையே அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவதன் அடிப்படைகளில் ஒன்று வலுவான மாநிலங்கள் என்ற கட்டமைப்பாகும். ஆனால் இதை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்று துடிப்பவர்கள்தான் பாஜகவினர். அதிமுகவை விழுங்கும் பாஜக நாங்கள் பெரிய கட்சியுடன் கூட்டு வைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் பெரிய கட்சி ஆகிவிடுவோம். தமிழ்நாட்டிலும் இது நடக்கும் என்று பாஜகவின் பொதுச் செயலாளரான ராம.சீனிவாசன் முன்பு ஒரு முறை வெளிப்படையாகவே கூறி னார். பீகாரில் இதுதான் நடந்து வரு கிறது. புதுவையில் இதுதான் நடக்கி றது. தமிழ்நாட்டில் அதிமுகவை மலைப்பாம்பு சுற்றி வளைத்து விழுங்குவது போல பாஜக விழுங்கி வருகிறது.
ஆனால் பாஜக எனும் மலைப்பாம்பு எங்களை விழுங்க வில்லை; மாறாக, உடல்வலி போக மசாஜ் செய்து விடுகிறது என்று சமாளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டிற்கு நிதி தராத பாஜக வை கண்டிக்கத் துணிவில்லாத அதிமுகவினால் தமிழ்நாட்டையோ, மாநிலத்தின் நலனையோ பாதுகாக்க முடியாது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட வேண்டு மானால், பாஜகவும் அதன் துரோகத் திற்கு துணை போகும் அதிமுகவும் தோற் கடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்; களத்தின் தேவை.
