எடப்பாடியின் ஈஸ்டர் வாழ்த்தும்... ஒளிந்திருக்கும் கோழைத்தனமும்!
“இயேசுபிரான் உயிர்த்தெழுந்தது போலத் தமிழகம் உயிர்த்தெழப் போகிறது” என்று எடப்பாடி ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லியுள்ளார். ஆனால், கிறிஸ்துவ அமைப்புகளை முடக்கும் பாஜகவின் சட்டங்களை அவர் கண்டிக்கவில்லை. சிறுபான்மை யினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்தை (CAA) ஆதரித்த எடப்பாடி, இப்போது கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்களை முடக்கும் FCRA சட்டத்தையும் எதிர்க்கத் துணிவின்றி மௌனம் காக்கிறார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே தமிழ்நாட்டை உயிர்ப்பிக்குமே தவிர, ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளுக்கு அஞ்சி நடுங்கும் எடப்பாடியின் கோழைத்தனம் அதிமுகவை ஒருபோதும் உயிர்த்தெழச் செய்யாது!
