ஆம்புலன்ஸ் விமான விபத்தில் 7 பேர் பலி
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தில்லிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ஆம்பு லன்ஸ் விமானம், திங்கள்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரெட் பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பீச்கிராப்ட் C90’ (Beech craft C90) ரக விமானம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்திலி ருந்து மாலை 7:11 மணிக்கு தில்லி நோக்கிப் புறப்பட்டது. சாத்ரா மாவட்டத்தின் சிம ரியா பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விழுந்து நொறுங்கியது. இடி யுடன் கூடிய மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ. 8 லட்சம் கடன் இதில் உயிரிழந்த நோயாளி சஞ்சய் குமார், மின்சாரம் பாய்ந்ததில் 60% தீக்காய மடைந்து ராஞ்சியில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை தில்லி க்குக் கொண்டு செல்ல, அவரது குடும்பத்தி னர் உறவினர்களிடம் சுமார் ரூ.8 லட்சம் கடன் வாங்கி இந்த ஆம்புலன்ஸ் விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட 7 பேரின் உடல்களும் சாத்ரா அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக் காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. விபத்து குறித்து விசாரணை நடத்த ‘விமான விபத்து விசாரணை பிரிவு’ (AAIB) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.
