states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) பொதுச் செயலாளர் ஆதித்யா தாக்கரே

பாஜக ஆட்சியில் சதுப்புநிலங்கள் - காடுகள் அழிப்பு, புதிய சுரங்கங்கள் தோண்டப்படுவது, குன்றுகள் இடிக்கப்படுவது போன்றவை தங்குதடையின்றி நடப்பதைக் காண்கிறோம். ஆனால், காற்று உள்ளிட்ட மாசுபாட்டைக் குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. நாட்டு மக்கள் மூச்சுத் திணறி வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பூபேஷ் பாகேல்

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் போது ‘சட்டை அணியாமல்’ போராட்டம் நடத்தியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு சிங் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது. பிரதமர் மோடி இளைஞர்களைக் கண்டு பயப்படுகிறார் என்பது இந்த நடவடிக்கை மூலம் புரிகிறது.

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயின் அலி

‘தி ஹண்ட்ரேட்’ கிரிக்கெட் தொடரில் இந்திய உரிமையாளர்களைக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்த பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது. வீரர்கள் அனைவரும் இதற்கு எதிராகப் பேச வேண்டும்.

ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சதா

போதிய ரீசார்ஜ் கட்டணம் இல்லாமல், அவுட்கோயிங் அழைப்புகளை நிறுத்துவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், இன்கம்மிங் அழைப்புகளை நிறுத்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது. இதனால் ஏழைகள், முதியவர்கள் மற்றும் கிராமப்புற பயனர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.