tamilnadu

img

பென்னாகரம் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

பென்னாகரம் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

தருமபுரி, ஏப்.5- பென்னாகரம் தொகுதி யில் போட்டியிடும் காங்கி ரஸ் வேட்பாளர் தமிழ்குமர னுக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்ப ளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ் குமரன், ஞாயிறன்று தொகுதிக்கு வருகை  தந்தார். அப்போது அவருக்கு கூட்டணி கட்சி யினர் நாகதாசம்பட்டி பிரிவு சாலையில் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, அங் கிருந்த அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து நடைபெற்ற பிரச்சாரத்தில், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆ. மணி எம்.பி., காங்கிரஸ் மாவட்டத் தலை வர் கோ.வி.சிற்றரசு, சிபிஎம் மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன், செயற்குழு உறுப் பினர்கள் வி.மாதன், ஜி.சக்திவேல், ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.குமார், கே.அன்பு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நா.நஞ்சப் பன், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமதாஸ், விசிக மாவட்டச் செயலாளர் கருப்பண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.