திருபுவனையில் ஜி.ராமகிருஷ்ணன் தீவிரப் பிரச்சாரம்
புதுச்சேரி, ஏப். 5- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்த லில் திருபுவனை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தட்சிணாமூர்த்தியை ஆதரித்து, கட்சி யின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டனர். மதகடிப்பட்டு பகுதியில் ஜி.ராம கிருஷ்ணன் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து, ‘அரிவாள் சுத்தி யல் நட்சத்திரம்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு திருவண்டார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாறுகளை யும், மக்கள் நலப் பணிகளையும் எடுத்துக்கூறி அவர் ஆதரவு திரட்டினார். இப்பிரச்சாரத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சீனுவாசன், மாநி லக்குழு உறுப்பினர்கள் அன்புமணி, சங்கர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ரகுநாத், முத்து, சங்கரி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மூடிக்கிடக்கும் ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் தட்சிணாமூர்த்தி உறுதி திருபுவனை தொகுதியில் வாக்கு சேகரித்த வேட்பாளர் தட்சிணாமூர்த்தி வாக்காளர்களிடம் பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார். மதகடிப்பட்டு பகுதியில் மக்களைச் சந்தித்தபோது அவர் பேசுகையில், “இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தொகுதியில் நீண்ட நாட்களாக மூடிக்கிடக்கும் உழவர் உதவியகத்தைத் திறக்க உடனடி நடவடிக்கை எடுப்பேன். மேலும், விவசாயி களுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் தடை யின்றி கிடைக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பாடு படுவேன்,” என்று உறுதியளித்தார்.
