தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோரை ஞாயிறன்று (ஏப்.5) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), டாக்டர் பூர்ணிமா (அம்பத்தூர்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (திரு.வி.க.நகர்), கார்த்திக் மோகன் (வில்லிவாக்கம்), தமிழன் பிரசன்னா (எழும்பூர்) ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அப்போது உடன் இருந்தார்.
