tamilnadu

img

உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகம்

உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகம்உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகம்

உதகை, ஏப்.5- உதகை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்றத் தொகு தியில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பி.ராமசந்திரன் அறிமுக கூட்டம், உதகையிலுள்ள இளம் படுகர் சங்க அரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டி.நாகராஜ் தலைமை வகித்தார். அரசு கொறடா கா.ராமசந்திரன், திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன் னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் போஜராஜ், மூத்த தலைவர் பெள்ளி, விசிக மாவட்டச் செயலா ளர் மோகன்குமார், தேமுதிக மாவட்டச் செய லாளர் பத்மநாபன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.