tamilnadu

img

அதிமுகவை பாஜக சிதைத்துவிடும்! கடலூரில் பெ. சண்முகம் கடும் எச்சரிக்கை!

அதிமுகவை பாஜக சிதைத்துவிடும்! கடலூரில் பெ. சண்முகம் கடும் எச்சரிக்கை!

கடலூர், ஏப். 5: “பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக, இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மிகவும் பரிதாபமான நிலைக்குத் தள்ள ப்படும்; கூட்டணிக் கட்சிகளைச் சிதைப்ப தையே வாடிக்கையாகக் கொண்ட பாஜகவிட மிருந்து அதிமுக தப்ப முடியாது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் சனிக் கிழமையன்று சி.பி.எம். சார்பில் நடை பெற்ற  மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு ஆபத்து  அப்போது, “பாஜகவுடன் சேரும்  எந்தவொரு கட்சியையும் அவர்கள் சுதந்திர மாகச் செயல்பட விடுவதில்லை. ஒன்று  அந்தக் கட்சியைத் தங்களுக்குள் கரைத்துக் கொள்வார்கள், இல்லையென்றால் துண்டு துண்டாக உடைத்துவிடுவார்கள் என்பதற்கு இந்தியாவில் பல உதாரணங்கள் உள்ளன. தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் இத்தகைய தீய கூட்டணியைத் தடுத்து நிறுத்துவது மக்களின் முதன்மையான கடமையாகும். சத்தீஸ்கர், தில்லி போன்ற மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடந்தபோது மௌனம் காத்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அவர்களைக் காக்கப்போவதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்றார் பெ. சண்முகம். தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல! இளைஞர் சக்தியைச் சிந்தனை வலிமை யுள்ள கூட்டமாக மாற்றாமல், கண்மூடித்தன மாகத் தன்னைப் பின்பற்றும் கூட்டமாக மாற்ற  நடிகர் விஜய் முயற்சிப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கை தொலை நோக்குப் பார்வை கொண்டது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளின் சுரண்டலைத் தடுக்க அரசு சார்பில் ‘செயற்கைக் கருத்தரித் தல் மையங்கள்’ அமைக்கும் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்துவது போன்ற வாக்கு றுதிகள் வரவேற்கத்தக்கவை. அதேபோல், சிதம்பரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வராத வாறு போட்டியிடாமல் தவிர்த்த திருமாவ ளவனின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது” என்றார். கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பு சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காங்கிரஸ் வேட்பாளர்  ஏ.எஸ். சந்திரசேகரன், மாநகரச் செயலாளர் ஆர். அமர்நாத், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.