tamilnadu

img

பாஜக கூட்டணி வெற்றிபெறுவது நாட்டிற்கு பேராபத்து: அ.சவுந்தரராசன் எச்சரிக்கை

பாஜக கூட்டணி வெற்றிபெறுவது நாட்டிற்கு பேராபத்து: அ.சவுந்தரராசன் எச்சரிக்கை

சென்னை, ஏப். 5- மாநகர போக்குவரத்து கழக சிஐடியு சங்கத்தின் சார்பில் “அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி உத்தி கள்” என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (ஏப். 4) ஓட்டேரியில் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுநதரராசன் பேசு கையில், பாஜகவை தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் வெற்றி பெற அனுமதிக் கக் கூடாது என்பதே முதன்மையான இலக்காக இருக்க வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றால் அதிமு கவை அழித்து விடுவார்கள். மேலும் ராஜ்யசபாவில் அவர்கள் பலம் பெறுவது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர வேண்டும். கூட்டணி கட்சியான திமுக ஆட்சி யில் இருந்தாலும், அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்யக் கோரி 62 நாட்கள் போராட்டம் நடத்தப் பட்டது. சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்க பதிவு கோரிக்கை என்பது மிக அடிப்படையானது. அரசு அதை ஏற்க மறுத்த போதும், ஒரு சென்டிமீட்டர் கூட சமரசமின்றி போராடி வெற்றி பெற்றோம். ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன், அரசியல் சாசன சட்டங்களை (தீண்டாமை ஒழிப்பு, இட ஒதுக்கீடு) அமல்படுத்தும் விதம் ஆகியவையே ஒரு கட்சியை ஆதரிப்பதற்கான அளவு கோல்களாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே தற்போது திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. தேர்தலில் கூட்டணிக் கணக் கின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருவொற்றியூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட  ஒரு நெருக்கமான தொகுதி என்ப தால், திமுக மற்றும் தோழமைக் கட்சி களுடன் இணைந்து உழைத்தால் எளிதில் வெற்றி பெறலாம். ஆனா லும் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை நம்முன்பு உள்ளது. அதேபோல் 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றிபெற பாடு பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், சங்கத்தின் பொதுச்செயலா ளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்,பாலாஜி ஆகியோரும் பேசி னர்.