மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவொற்றியூர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜூக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!
சென்னை, ஏப். 5- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தர ராஜூக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் 5ஆவது வார்டு பெரியார் நகரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி னார். முன்னதாக பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருநகர், ரேடியன் அப்பார்ட்மெண்ட்ஸ், அஜாக்ஸ், மாணிக்கம் நகர், அஞ்சுகம் நகர், காந்தி நகர், ஸ்ரீ ரங்கம் நகர், விம்கோ நகர், அம்பேத்கர் நகர், ராமகிருஷ்ணன் நகர், பாரதியார் நகர், பாரத் நகர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம், வணிகர் களிடம் ஞாயிறன்று (ஏப். 5) வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பட்டாசு வெடித்து, வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி, சால்வை அணிவித்து மோர், குளிர்பானங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பளித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். எல்.சுந்தரராஜ் செய்தியாளர் களிடம் பேசுகையில், 5ஆவது வட்டத்தில் 6.33 லட்சத்தில் அஜாக்ஸ் ஹன்சா கார்டன் பூங்கா, 58.78 எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை,40.05 லட்சத்தில் பள்ளிக் கட்டிடங்கள் மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் என பல்வேறு பணிகள் 1 கோடி ரூபாய்க்கு மேல் நடைபெற் றுள்ளன. மேலும் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளன. இப்படி ஏராளமான பணிகளை கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப் பினர் கே.பி.சங்கர் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த வகை யில் எனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து மக்கள் பெருவாரியான வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய் வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். இதில் தேர்தல் பணிக்குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம.அருள்தாசன், திமுக 5ஆவது வார்டு வட்டச்செயலாளர், மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம், தொகுதி பொறுப்பாளர் எஸ்.மோகன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எம்.ராமகிருஷ்ணன், பி.வி.முருகன், கே.பி.துரை (காங்கிரஸ்), விசிக மாவட்டச் செயலாளர் அலெக் சாண்டர், தேமுதிக பகுதிச் செயலாளர் பவுல்ராஜ், மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.ஜாபர் உசேன், என்.இப்ராஹீம் காஜா, நசீர் அகமத், எல்.ஜாபர் சாதிக், எஸ்.டி.மோகன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர்கள் எஸ்.கதிர்வேல், ஆர்.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
